twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் பிறந்த நாள்… டூடுல் வெளியிட்டு கௌரவித்த கூகுள்!

    |

    சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், ஒரு நம்ப முடியாத அதிசயம், நடிப்பின் சக்கரவர்த்தி. அவரின் 93வது பிறந்த தினம் இன்று.

    Recommended Video

    Sivaji Ganesan 93rd Birth Anniversary | MK Stalin | Sivaji Ganesan Memorial

    கலைத்தாய் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மேலும், சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள் அவரை கௌரவிக்கும் வகையில் அவர் படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது.

    நடிப்பின் மைல் கல் சிவாஜி... ட்விட்டரில் பெருமைப்படுத்திய கமல் நடிப்பின் மைல் கல் சிவாஜி... ட்விட்டரில் பெருமைப்படுத்திய கமல்

    சிவாஜி கணேசன்

    சிவாஜி கணேசன்

    1928ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி சின்னையா மன்ராயா் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு 4வது மகனாக பிறந்தார் சிவாஜி கணேசன். இவருடைய இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி ஆகும். நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட சிவாஜி திரையுலகிற்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்தார். அப்போது சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து மிரட்டி இருந்தார். இந்த நாடகத்தை பார்த்த தந்தை பெரியார்அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து இன்று இந்த பெயர் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

    பராசக்தி

    பராசக்தி

    1952ம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பு திறனை மெய்பித்தார். ஹீரோ, வில்லன், குணசித்திரம் என எந்த பாத்திரங்களாக இருந்தாலும் அதையெல்லாம் சிவாஜி, மறுக்கவேயில்லை. கிடைத்த வாய்ப்பை பிடித்துக்கொண்டு திரையில் அடித்து நொறுக்கினார்.

    கர்ஜிக்கும் சிவாஜி

    கர்ஜிக்கும் சிவாஜி

    கட்டபொம்மனையோ, கர்ணனையோ... ஏன் கடவுள் சிவபெருமானையோ நாம் பார்த்தது இல்லை. அவற்றை நம் கண்முன் நிறுத்தியவர் சிவாஜி என்ற நடிப்பின் சக்ரவர்த்தி. சிவாஜியின் உடை... நடை, வசனத்தை கர்ஜிக்கும் சிம்மக்குரல்... கண், புருவம், கன்னம், ஏன் தலை முடி கூட நடிப்பின் உச்சம் பேசும்.

    ராஜநடை

    ராஜநடை

    கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடையில் வித்தியாசத்தை கொண்டு வந்தவர் சிவாஜி. திருவிளையாடல் படத்தில் சிவனாக ராஜநடை... பார்த்தால் பசி தீரும் படத்தில் தாங்கி தாங்கி நடந்தும், முதல் மரியாதை படத்தில் இயல்பான நடையை வெளிப்படுத்தி நடையிலே தனது கதாபாத்திரத்தை கொண்டு வந்த ஒரு பிறவிக்கலைஞன் சிவாஜி.

    ஏராளமான படங்கள்

    ஏராளமான படங்கள்

    பராசக்தி முதல் படையப்பா வரை பல உயரங்களையும் சாதனைகளையும் தொட்டு தமிழ் சினிமாவிற்கே புது அடையாளத்தைத் தந்தவர் சிவாஜி. 9 தெலுங்குத் திரைப்படங்கள், 2 ஹிந்தித் திரைப்படங்கள், ஒரு மலையாளத் திரைப்படம் என 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். இவரின் நடிப்பில் வெளிவந்த கர்ணன், கௌரவம், நவராத்திரி, பார்த்தால் பசி தீரும், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, முதல் மரியாதை, போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மைல் கற்களாக அமைந்தன.

    ஏராளமான விருதுகள்

    ஏராளமான விருதுகள்

    நாடி, நரம்பு அனைத்தும் சூடேறி அனைத்து உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்தவர் சிவாஜி கணேசனுக்கு கலைமாமணி விருது,பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியர் விருது, தாதாசாகெப் பால்கே விருது என ஏராளமான விருதுகளை குவிந்துள்ளார்.

    94வது பிறந்த நாள்

    94வது பிறந்த நாள்

    தமிழகத்தில் நடிகர் திலகம் எனப் போற்றப்படும் சிவாஜி கணேசனின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நடிப்பின் சக்ரவர்த்தி சிவாஜியை சிறப்பிக்கும் வண்ணம் அவரது படத்தை வைத்து கூகுள் ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதற்குப் பலரும் டிவிட்டரில் புகழாரம் சூட்டி உள்ளனர். சிவாஜி என்ற உன்னதக்கலைஞன் மறைந்து இருந்தாலும், அழியாக் கலையோடு மக்கள் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார் சிவாஜி. அவரது பிறந்த நாளை அவரின் தீவிர ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Google today celebrated the 93rd birthday of Sivaji Ganesan, one of India's first method actors and widely considered among the nation's most influential actors of all time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X