»   »  லேகா 'அவுட்'- கன்பர்ம்

லேகா 'அவுட்'- கன்பர்ம்

Subscribe to Oneindia Tamil


சிம்புவின் கெட்டவன் படத்திலிருந்து லேகா வாஷிங்டன் நீக்கப்பட்டு விட்டார். இதை லேகாவே ஒரு வழியாக ஒத்துக் கொண்டுள்ளார்.

Click here for more images

அழகான வீடியோ ஜாக்கியாக அசத்திக் கொண்டிருந்த லேகா, சிம்புவின் கண்ணில் பட, அவரை தனது கெட்டவன் படத்தில் நாயகியாக்கினார். தயிர் சாதம் என்ற பெயரில் பிராமணப் பெண் வேடத்தையும் கொடுத்தார்.

லேகா நடித்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தபோது சிம்புவுக்கு திருப்தி வரவில்லையாம். இதனால் லேகாவை படத்திலிருந்து நீக்கி விட்டு ஆசின் அல்லது திரிஷாவைப் போடலாம் என நினைத்தார் சிம்பு.

இந்த செய்தி வெளியில் பரவியதும் வேகம் வேகமாக அதை மறுத்தார் லேகா. நான் தான் கெட்டவன் படத்தின் நாயகியாக தொடர்கிறேன் என்று கூறி சிடி ஆதாரத்தையும் பத்திரிகைகளுக்குக் கொடுத்தார்.

அதேசமயம், லேகா இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து சிம்பு தரப்பில் பெருத்த மெளனம் நிலவியது. அதேசமயம், ஆசின் நடிக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.

இந்த நிலையில் தான் கெட்டவன் படத்தில் நடிக்கவில்லை என்று லேகாவே தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கெட்டவன் படத்தில் நடிக்கவில்லை. அதை சிம்பு என்னிடம் கூறி விட்டார் என்று கூறியுள்ளார் லேகா. ஆனால் இதுவரை லேகா படத்தில் இல்லை என்று சிம்பு எந்த தகவலையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் அனுஷ்டிக்கிறார்.

இதற்கிடையே, படத்தின் தயாரிப்பாளரும் படத்திலிருந்து ஜகா வாங்கி விட்டாராம். அதற்குப் பதில் வேறு தயாரிப்பாளரை சிம்பு பிடித்துள்ளார். இதுவரை ஆன செலவுகளை அந்த புதுத் தயாரிப்பாளர், பழைய தயாரிப்பாளரிடம் கொடுக்க சம்மதித்துள்ளாராம்.

படம் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் மாறப் போகிறதோ?

Read more about: kettavan, lekha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil