»   »  ரிஸ்க் எடுப்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று: கமல் பற்றி சில சுவாரஸ்யங்கள்

ரிஸ்க் எடுப்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று: கமல் பற்றி சில சுவாரஸ்யங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தோல்வி வந்து தலையை தட்டி படுக்க வைத்தாலும் அசராமல் புது முயற்சிகளில் ஈடுபடுவர் உலக நாயகன் கமல் ஹாஸன்.

உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் தரத்தை உலக அளவில் உணர வைத்தவர் என்று பெயர் எடுத்தவர் கமல்.

சினிமாவில் புதுமுயற்சி எடுக்க சற்றும் தயங்காத பரமக்குடிக்காரரை பற்றி சில சுவராஸ்யமான விஷயங்கள்.

களத்தூர் கண்ணம்மா

களத்தூர் கண்ணம்மா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்திலேயே கமல் நடிப்பில் அசத்தியிருப்பார். முதல் படத்திற்காக அவர் குடியரசுத் தலைவரின் தங்க பதக்கத்தை பெற்றார். அது வெறும் துவக்கம் தான்.

மலையாளம்

மலையாளம்

கமல் ஹீரோவான புதிதில் தமிழில் வாய்ப்புகள் சரியாக இல்லாமல் தள்ளாடியபோது மலையாள திரையுலகம் அவரை வரவேற்று ஆதரித்து வாழ வைத்தது.

கே. பாலச்சந்தர்

கே. பாலச்சந்தர்

கமல் ஹாஸன் இன்று இவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் என்றால் அதில் இயக்குனர் கே. பாலச்சந்தருக்கு பெரும் பங்கு உண்டு. பாலச்சந்தர் இல்லாமல் கமல் சிகரத்தை தொட்டிருக்க முடியாது. அவரின் இயக்கத்தில் 36 படங்களில் நடித்துள்ளார் கமல்.

ரிஸ்க்

ரிஸ்க்

ரிஸ்க் எடுப்பது கமலுக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று. வித்தியாசமாக ஏதாவது முயன்று படுதோல்வி அடைவார். இருப்பினும் மீசையில் பட்ட மண்ணை தட்டிவிட்டு மீண்டும் புது முயற்சியில் இறங்குவார்.

100வது படம்

100வது படம்

கமலின் 100வது படம் ராஜ பார்வை. அவரே தயாரித்த இந்த படத்தில் கண் தெரியாத இசைக் கலைஞனாக நடித்திருப்பார். எத்தனை ஹீரோக்கள் தங்களின் 100வது படத்தில் ரிஸ்க் எடுப்பார்கள். கமல் ரிஸ்க் எடுத்தார் படுதோல்வி அடைந்தார். ஆனால் அதை நினைத்து முடங்கிப் போகவில்லை.

நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

ராஜ பார்வை படத்தை தயாரித்து தோல்வி அடைந்த கமலுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தில் இருந்து அவர் மீண்டும் வரவே 8 ஆண்டுகள் ஆனது என்று கூறப்பட்டது.

ஒரே நடிகர்

ஒரே நடிகர்

கமல் ஹாஸன் தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகள் வாங்கியுள்ளார், இனியும் வாங்குவார். ஆனால் பிலிம்பேர் விருது வரலாற்றில் சிறந்த நடிகருக்கான விருது வாங்கிய ஒரு படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் கமல். அந்த படம் சாகர்.

ரஜினி

ரஜினி

நடிக்க வந்த புதிதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல் ஹாஸனின் படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். இதே நிலை தொடர்ந்தால் நீங்கள் முன்னேற முடியாது, அதனால் சோலோ ஹீரோவாக நடியுங்கள் என ரஜினிக்கு அறிவுரை வழங்கியவர் கமல்.

ஜாக்கி சான்

ஜாக்கி சான்

கமல் ஹாஸன் நடிகர் ஜாக்கி சானின் தீவிர ரசிகர். கமலின் தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் கலந்து கொண்டார். விழாவில் பேசிய கமல் கூறுகையில், ஜாக்கி சான் போன்று சண்டை காட்சிகளில் நடிக்க முயன்று 32 தடவை எலும்பு முறிவு ஏற்பட்டது என்றார்.

English summary
Actor Kamal Haasan has made Indians proud in the international level. We wish Ulaga Nayagan a very happy and memorable birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil