காலுக்குக்காக செருப்பா?..செருப்புக்காக காலா எது சரி?..ஹிப்ஹாப் ஆதியிடம் வசமாக சிக்கிய சுந்தர்.சி

சென்னை: இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் பெரும்பாலும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரியாமல் அதற்கு அடுத்தக்கட்டத்தில் இருப்பவர்களுடன் பயணித்தவர்.

இருப்பினும் அவரது படங்களில் பாடல்கள் ஹிட் ஆகிவிடும். வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, இமான், தேவா, சிற்பி, ஹிப் ஹாப் ஆதி என அவைவருடனும் மூன்றிற்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.

குறிப்பாக ஹிப் ஹாப் ஆதியுடன் ஐந்து படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் இருவரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்பதால் கூட இருக்கலாம்.

ஆம்பள - ஆக்ஷன்

ஆம்பள - ஆக்ஷன்

சுந்தர்.சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி என்று மூவரும் சேர்ந்து ஆம்பள திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றினர். அதற்குப் பிறகு அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்ஷன் என சுந்தர்.சி இயக்கிய படங்களுக்கு ஆதி இசையமைத்தார். கடைசி படமும் சுந்தர்.சி - விஷால் - ஹிப் ஹாப் கூட்டணியில் உருவானது.

முன்னோடிகள்

முன்னோடிகள்

பாடல் கம்போஸிங் செஷனையே ஷூட் செய்து அதன் மூலம் டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களை புரமோட் செய்தது மட்டுமல்லாமல் தன்னையும் புரமோட் செய்தவர்தான் இயக்குநர் நெல்சன். பாடலை விட, படத்தை விட அவரது மேக்கிங் வீடியோவிற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் நெல்சன் - அனிருத் கூட்டணிக்கெல்லாம் முன்னோடிதான் சுந்தர்.சி - ஆதி கூட்டணி.

ஆம்பள புரமோஷன்

ஆம்பள புரமோஷன்

ஆம்பள பட புரமோஷனாக அதனுடைய கம்போஸிங் செஷன் தான் அமைந்தது. சுந்தர்.சி மற்றும் விஷால் பாடல் சூழ்நிலையைச் சொல்லி பல்லவியும், சரணமும் இப்படியெல்லாம் வர வேண்டும் என்று சொல்ல சொல்ல, ஹிப் ஹாப் ஆதி அவர்கள் சொல்வதெற்கெல்லாம் தலையசைத்துவிட்டு இறுதியாக ஒரு சந்தேகம் கேட்பார். "சரணம், பல்லவின்னு சொல்றீங்களே... அப்படின்னா என்ன?" என்று ஆதி கேட்டவுடன், சுந்தர்.சியும் விஷாலும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்ப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பிரபலமானது.

செருப்புக்கு காலா, காலுக்கு செருப்பா

செருப்புக்கு காலா, காலுக்கு செருப்பா

பின்னணி இசையின் போது, ஒரு காட்சிக்கு ஆதி இசையமைத்தது சுந்தர்.சிக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றச் சொல்வாராம். அப்போது ஹிப் ஹாப் ஆதி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தால்,"தம்பி, காலுக்குதான் செருப்பு வேணும். செருப்புக்கு கால் தேடக் கூடாது" என்று கூறுவாராம். சில சமயங்களில், தான் சொல்லும் சூழ்நிலையை விட சிறப்பாக ஒரு பாடலை ஆதி கம்போஸ் செய்தால், தான் காட்சியை மாற்றிக் கொள்கிறேன் என்று சுந்தர்.சி சொல்வாராம். அப்போது அந்த செருப்பு உதாரணத்தை ஆதி கூறினால்,"இல்லடா தம்பி, தேவப்பட்டா செருப்புக்கு ஏத்தா மாதிரி கூட கால மாத்திக்கலாம்" என்று நேர்மாறாகவும் கூறுவாராம் சுந்தர்.சி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X