»   »  முண்டா தட்டி வரும் லிண்டா!

முண்டா தட்டி வரும் லிண்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் கலக்கல் அழகி லிண்டா ஆர்செனியோ, முண்டா தட்டி தமிழ் பிளஸ் மலையாளத்துக்கு வந்துள்ளார்.

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியும், சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் இணைந்து அசத்தும் படம் பழசி ராஜா. ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் தமிழில் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

பழசிராஜா என்ற ராஜாவின் வேடத்தில் மம்முட்டி நடிக்க, அவருக்கு உதவும் படைத் தளபதியாக சரத் வேடம் கட்டியுள்ளார். பழம்பெரும் மலையாளப் பட இயக்குநர் ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில்தான் லிண்டா ஹீேராயினாக அறிமுகமாகிறார். தமிழ், மலையாளத்துக்குத்தான் லிண்டா புதுமுகம். ஆனால் மும்பையில் அவர் ஏற்கனவே கவர்ச்சி அலைகளை பரப்பி விட்டார். காபூல் எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் லிண்டா கலக்கலாக நடித்துள்ளார். அதேபோலா, ரங் தே பசந்தியை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் படத்திலும் நடிக்க கைநாட்டு வைத்துள்ளார்.

பழசிராஜாவில் மம்முட்டியின் ஜோடியாக நடிக்கிறாராம் லிண்டா. இவர் தவிர பத்மப்பிரியாவும் படத்தில் இருக்கிறார். பட பூஜை சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய இயக்குநர் ஹரிஹரன், மம்முட்டிக்கு இப்படத்தில் ஹாலிவுட் நடிகை ஒருவரைத்தான் ஹீேராயினாகப் போடவுள்ளோம். காரணம், கதைப்படி நாயகி நம்ம ஊர் பெண் அல்ல என்பதால் என்று கூறியிருந்தார். அதன்படி இப்போது மும்பையிலிருந்து இளமைப் புயல் லிண்டாவை இழுத்து வந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் தமிழில் நடிக்க வந்திருப்பதால் லிண்டா படு ஜாலியாக உள்ளார். அது என்ன மாதிரியான ஜாலி என்று லிண்டாவிடம் கேட்டபோது, மம்முட்டி மிகப் பெரிய நடிகர். அவர் நடித்த அம்பேத்கர் படத்தை நான் பார்த்து விட்டு அசந்து போனேன்.

தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. அவருடன் இணைந்து நடிப்பதில் ரொம்ப சந்தோஷம் என்றார். மன்னரை மயக்கும் அழகியாக இப்படத்தில் நடிக்கிறாராம் லிண்டா.

அப்படியே ரசிகர்களையும் மயக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil