»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் இரக்கம் காட்டி இறங்கி வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி. செளத்ரி, சம்பளவிஷயத்திலும் இறங்கித் தான் போவார். சம்பளத்தை ஏற்றவே மாட்டார்.

முதல் படத்தில்தான் இப்படி என்றில்லை. அடுத்தடுத்த படமும் அவரது கம்பெனிக்கே பண்ணினாலும் பெரிதாக ஒன்றும் கொடுத்து விட மாட்டார்.

சூப்பர் குட் பிலிம்ஸின் "ஆனந்தம்" படத்தை இயக்கிய லிங்குசாமிக்கு அடுத்த பட வாய்ப்பை வழங்கினார் செளத்ரி.

சூப்பர் குட் பிலிம்ஸின் இந்த 50வது படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் விக்ரமன். ஆனால் அது லிங்குசாமிக்குப் போனதில்திரையுலகமே ஆச்சர்யப்பட்டது.

இதற்கிடையில் ஷோகன் பிலிம்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு ரூ.35 லட்சம் சம்பளம் தருவதாகக் கூறியது. இதை செளத்ரியிடம் தெரிவித்த லிங்குசாமி, முதலில்வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்பதால் ரூ.30 லட்சம் கொடுங்கள் என அவரிடம் கேட்டார் லிங்கு.

இதில் டென்ஷனான செளத்ரி, லிங்குசாமியைத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சுமாராகப் போன "ஆனந்தம்", பிறகு எதிர்பாராத அளவிற்கு பிக்-அப்ஆகி கலெக்ஷனில் கல்லா கட்ட, திரும்பவும் லிங்குசாமியைக் கூப்பிட்டு அனுப்பினார் செளத்ரி.

இதையடுத்து ரூ.25 லட்சம் மட்டுமாவது கொடுங்கள் என்று கேட்டார் லிங்குசாமி. முடிவில் ரூ.20 லட்சம் தருவதாகப் பேசி முடித்து ஏற்காட்டுக்குடிஸ்கஷனுக்கும் லிங்குசாமியை அனுப்பி வைத்தார் செளத்ரி.

பிறகு, என்ன காரணமோ சொல்லி அந்தப் படம் ஆரம்பிப்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த செளத்ரி, கடைசியில் அந்தப் படத்தையே ட்ராப் செய்துவிட்டார்.

இதில் அப்செட்டான லிங்குசாமி, நெருக்கமானவர்களிடம் பேசும்போது செளத்ரியைத் திட்டித் தீர்த்து வருகிறார்.

ஷோகன் பிலிம்ஸ் வாய்ப்பும் போனதே என புலம்பி வரும் லிங்குசாமிக்கு ஒரே ஒரு ஆறுதல் உண்டு. அவர் தற்போது பாலச்சந்தரின் கவிதாலயாவுக்காகப் படம்பண்ணுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil