»   »  காதல் என்பதைக் கண்டுபிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன்... காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம்!

காதல் என்பதைக் கண்டுபிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன்... காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல்... இந்த மூன்றெழுத்து மகுடிக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். அதிலும், காதலைக் கொண்டாடிய படங்களை விரல் விட்டு எண்ண முடியாது.

அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் காதல் வேரூன்றி உள்ளது.

அதிலும் குறிப்பாக காதல் பாடல்கள் இளைஞர்களுக்கு தேசிய கீதம் என்றே சொல்லலாம். அப்படி ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்படவேண்டிய காதல் ரசம் சொட்டும் பாடல்களின் தொகுப்பு இதோ...

நலம் நலமறிய ஆவல்...

நேரில் பார்க்காமலேயே பேஸ்புக் மூலம் காதலித்துக் கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கு முன்னோடியாக அமைந்தது தான் காதல் கோட்டை படம். வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா... என வார்த்தைகளில் காதலை வளர்த்த படம்.

என்னைத் தாலாட்ட வருவாளா...

நாயகனும், நாயகியும் தொட்டுக் கொள்ளாமலேயே ரொமான்ஸ் காட்சிகளில் ரசிகர்களை சொக்க வைத்த படம் காதலுக்கு மரியாதை. பெற்றோர்களுக்காக காதலை விட்டுத் தரும், பின் தன் பிள்ளைகளுக்காக பெற்றோர் இறங்கி வருவதும் என பாடம் சொன்ன படம் இது.

ஒரு மணி அடித்தால்...

குரலை மட்டுமே கேட்டு காதல் உருவான படம். காதல் பாடல்களுக்கு பெயர் போன முரளி தான் நாயகன். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஆஹா...

பொட்டு வைத்த வட்டநிலா...

படத்தின் தலைப்பிலேயே இதயம் என காதலின் குறியீடைக் கொண்ட படம். காத்திருப்பதும் காதல் தான் என்பதைச் சொல்லும் கதை.

காதல் சடுகுடு...

எல்லா படங்களும் கிளைமாக்ஸின் காதலில் வெற்றி பெறுவதோடு முடிய, வித்தியாசமாக அதற்குப் பின் காதலை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதை தனக்கே உரிய பாணியில் அலைபாயுதேவில் கூறியிருந்தார் மணிரத்னம்.

மன்னிப்பாயா...

காதல் திரைப்படங்களுக்கு பேர் போன கௌதம் மேனனின் படம். அதிலும், முதன்முறையாக ஜோடி சேர்ந்த சிம்பு - திரிஷா கெமிஸ்ட்ரி அதிகம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
A round up of love songs in Tamil films like Kadhal kottai, Kadhaluku mariyathai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil