twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லூசியா.. கேஜிஎஃப்.. காந்தாரா.. சத்தமே இல்லாமல் சாதிக்கும் சான்டல்வுட்.. சாத்தியமானது எப்படி?

    |

    பெங்களூரு: வெறும் 50 லட்சம் ரூபாயில் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட லூசியா படம் அதுவரை கன்னட சினிமா மீது வைக்கப்பட்ட கேவலமான பார்வைகளை சுக்குநூறாக உடைத்து சிதறடித்தது.

    மற்ற மொழி படங்களை ரீமேக் செய்து அந்த படங்களையும் மோசமாக காட்சிப்படுத்தும் திரையுலகம் தான் சான்ட்ல்வுட் என்கிற இழிவான பேச்சுக்கள் எழுந்து வந்த நிலையில், குறைந்த பட்ஜெட்டில் இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் படங்களை எங்களாலும் படைக்க முடியும் என்று கன்னட சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

    லூசியா போட்ட விதை, கேஜிஎஃப், சார்லி 777 மற்றும் காந்தாரா என கன்னட திரையுலகை சர்வதேச நாடுகள் கூட உற்றுப் பார்க்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது என்றால் மிகையல்ல..

    லூசியா படத்தை இயக்கிய டைரக்டருடன் கைகோர்த்த அமலா பால் புது வெப் சீரிஸ்... 16ம் தேதி ரீலீசாக இருக்கு லூசியா படத்தை இயக்கிய டைரக்டருடன் கைகோர்த்த அமலா பால் புது வெப் சீரிஸ்... 16ம் தேதி ரீலீசாக இருக்கு

    கடைசி இடத்தில்

    கடைசி இடத்தில்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்கள் என தென்னிந்தியா படங்களை வசூல் ரீதியாக பிரித்து வந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. அதே போல சிறந்த படங்களை கொடுக்கும் வரிசையில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் இருந்தது. ஆனால், இன்று மலையாள திரையுலகே பார்த்து வியக்கும் அளவுக்கு லோ பட்ஜெட்டில் தரமான பல நல்ல படங்களை கன்னட திரையுலகம் கொடுத்து மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது.

    லூசியா

    லூசியா

    கன்னடத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் லூசியா. பவன் குமார் எழுதி இயக்கிய இந்த படத்தில் சதீஷ் நினாசம், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தைத் தான் 2015ல் சித்தார்த் எனக்குள் ஒருவன் என ரீமேக் செய்து நடித்தார். ஆனால், கன்னடத்தில் இருந்த விறுவிறுப்பு தமிழில் இல்லாத நிலையில், இங்கே படம் சரியாக போகவில்லை.

    கோட்டைக் கட்டிய கேஜிஎஃப்

    கோட்டைக் கட்டிய கேஜிஎஃப்

    கேஜிஎஃப் முதல் பாகம் வெறும் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 250 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியது. மற்ற மொழிகளில் கூட அந்த படத்தை ரீமேக் செய்ய முடியாத அளவுக்கு பான் இந்தியா வெற்றியை அந்த படம் படைத்தது. இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் யஷ்ஷை வைத்து ஹாலிவுட் தரத்தில் இப்படியொரு ஆக்‌ஷன் படத்தை கொடுப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    1000 கோடி வசூல்

    1000 கோடி வசூல்

    கேஜிஎஃப் முதல் பாகம் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில், வெறும் 100 கோடி பட்ஜெட்டில் உருவான கேஜிஎஃப் 2 திரைப்படம் டோலிவுட் இயக்குநர் ராஜமெளலியின் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு 1100 கோடி வசூலை இந்த ஆண்டு குவித்தது. கேஜிஎஃப் 2வின் வசூலை முந்த தற்போது ஜப்பானில் எல்லாம் ஆர்ஆர்ஆர் படத்தை ரிலீஸ் செய்துள்ளார் ராஜமெளலி.

    காந்தாரா கர்ஜனை

    காந்தாரா கர்ஜனை

    வெறும் 15 கோடியில் இப்படியொரு மிரட்டலான படத்தை நேட்டிவிட்டி மாறாமல் எடுத்துக் காட்டி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே கதிகலங்க செய்ய முடியும் என்பதை இயக்குநரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி நிகழ்த்தி காட்டி உள்ளார். பிரபல மலையாள இயக்குநர்களே காந்தாரா படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டி வருகின்றனர். கங்கனா ரனாவத் இந்த படத்தை நேரடியாக ஆஸ்கருக்கு அனுப்புங்க என்று சொல்லும் அளவுக்கு படம் தரமாக இருக்கிறது.

    சுய சிந்தனையே காரணம்

    சுய சிந்தனையே காரணம்

    அதள பாதாளத்திற்கு பாலிவுட் சென்றதற்கு தென்னிந்திய படங்களை பெரிதும் சமீப காலமாக நம்பி ரீமேக் செய்து வருவது தான். அந்த மொழி மக்களுக்கு அந்த மொழி இயக்குநர்கள் நேட்டிவிட்டியை சார்ந்த சுய சிந்தனை கொண்ட படங்களை கொடுக்கும் போது அந்த படங்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அங்கீகாரம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு கன்னட திரையுலகம் ஒரு ஆகச் சிறந்த உதாரணமாக சில ஆண்டுகளில் மிகப்பெரிய சினிமா சரித்திரத்தை எழுதி உள்ளதே சாட்சி!

    English summary
    Lucia, KGF and Kantara, how Sandalwood turns into a success path in a short time and grabs every other industry attention to Kannada cinema. Always own thinking and nativity story makes you proud and gets you in high positions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X