Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
"மாநாடு" மாஸ் கொடுத்துச்சு.. "டான்" மரியாதையை கொடுத்திருக்கு.. நடிகர் எஸ் ஜே சூர்யா!
சென்னை: இயக்குனராக அறிமுகமாகி இப்போது நடிகராக பல படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா
Recommended Video
மாநாடு படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய எஸ் ஜே சூர்யா சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் நடித்து கலக்கி இருந்தார்
இந்த நிலையில் மாநாடு மாஸ் கொடுத்துச்சு.. டான் மரியாதையை கொடுத்திருக்கு என நெகிழ்ந்து பட விழாவில் பேசியுள்ளார்.
பா.ரஞ்சித்
10
ஆண்டு
திரைப்பயணம்..வித்தியாசமான
போஸ்டருடன்
வாழ்த்துச்
சொன்ன
சந்தோஷ்
நாராயணன்!

ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து
நடிகராக ஆசைப்பட்டு வந்து திரைத்துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ் ஜே சூர்யா வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அஜித் இரட்டை வேடத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து கலக்கிய இருந்த வாலி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தையும் இயக்கி அதிலும் வெற்றி கண்டார் . பின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, இசை என பல வித்தியாசமான கதைகளில் நடித்து ஹீரோவாகவும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்தார்

மாநாடு
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என எது கிடைத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரங்கள் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்துள்ளன. அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் நடித்து கலக்கியிருந்த எஸ் ஜே சூர்யாவுக்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து இருப்பார்.

பிளாக்பஸ்டர் வெற்றி
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி கண்டது இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான நடிப்பை வேறு ஸ்டைலில் வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருப்பார்

"மாநாடு" மாஸ் கொடுத்துச்சு.. "டான்" மரியாதையை கொடுத்திருக்கு
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டான். மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டாக்டர் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சூரி, சமுத்திரகனி, முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி, என பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. டான் படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வில்லத்தனம் காமெடி என கலக்கிய எஸ் ஜே சூர்யா படவிழா ஒன்றில் பேச்சுகளில் "மாநாடு" மாஸ் கொடுத்துச்சு.. "டான்" மரியாதையை கொடுத்திருக்கு என நெகிழ்ந்து பேசியுள்ளார்.