For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நார்வேயில் முதல் முறையாக பிரமாண்டமாக வெளியாகிறது சூர்யாவின் மாற்றான் - ஒன்இந்தியா ஸ்பெஷல்!

  By Shankar
  |
  ஆஸ்லோ: நார்வேயில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் ஒரு தமிழ்ப் படம் வெளியாகிறது. அது சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளிவரும் மாற்றான்!

  கேவி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா - காஜல் அகர்வால் நடித்துள்ள படம் இது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட படமும் இந்த மாற்றான்தான்.

  இந்தியா மற்றும் உலகெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

  நார்வேயைப் பொறுத்தவரை இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். காரணம் படத்தில் இடம்பெறும் நாணி கோணி.. என்ற பாடல் காட்சி முழுக்க முழுக்க நார்வேயில்தான் படமாக்கப்பட்டது. இதுவரை உலக மொழிகளில் எந்த சினிமாவும் படமாக்கப்படாத மிக அழகிய லொகேஷன்களில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நார்வேயின் மொத்த அழகையும் இலவசமாக உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளதாக கே.வி.ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

  ஷூட்டிங்குக்காக நார்வேக்கு சூர்யா வந்திருந்தபோது, இங்கு வாழும் தமிழ் மக்கள் காட்டிய வரவேற்பும் அன்பும் அவரை திக்குமுக்காட வைத்தது. நிச்சயம் நான் இன்னொரு முறை நார்வேக்கு வந்து உங்கள் விருந்தினராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தானாகவே அறிவித்தார் சூர்யா என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  நார்வேயில் இந்தப் படத்தை வசீகரன் இசைக்கனவுகள்(V.N.Music Dreams) நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து நாளை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்கள்.

  உலகளாவிய ரீதியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்திரைப்படம் நோர்வே நாட்டில் உள்ள பல ஊடகங்களில் பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. நார்வீஜியன் மொழி ஊடகங்களும் கூட இந்த தமிழ்ப் படம் குறித்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

  இதனால் நார்வே நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுடன் இணைந்து இப்படத்தைப் பார்பதற்கு அந்த நாட்டு மக்களும் மிகவும் ஆர்வமாக உள்ளதாக, இந்தப் படத்தை அங்கு வெளியீடு செய்யும் வசீகரன் சிவலிங்கம் தெரிவித்தார்.

  நார்வேயில் படம் பிடிக்கணுமா...?

  அதுமட்டுமல்ல, இனி நார்வே நாட்டில் படப்பிடிப்பு செய்ய விரும்புகின்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான வசதிகளை செய்து தர தாம் தயாராக இருப்பதாகவும் வசீகரன் தெரிவித்துள்ளார்.

  ஒஸ்லோ, லில்ஸ்த்ராம் (Lillestrøm), சாண்ட்விகா (Sandvika), பேர்கன் (Bergen), சந்ட்னேஷ்(Sandnes), ட்ரான்டெய்ம் (Trondheim) போன்ற நகரங்களில் மாற்றான் திரைப்படம் வெளியிடப்படுகிறது. இவற்றில் ஆஸ்லோ தவிர, பிற நகரங்களில் வெளியாகும் புதிய தமிழ்ப் படம் அநேகமாக மாற்றானாகத்தான் இருக்கும்.


  நார்வே - அரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள் (Norway Showtimes):

  Maattrraan- Tamil Film: Fredag den 12.10.12
  Symra sal 1 Kl 20:15 (Oslo)

  Lillestrømkino sal 1 Kl 21:00(Lillestrøm)
  Sandnes SF Kino sal 3 Kl 18:45(Sandnes)
  Bergen Kino MB 2 KL 17:30(Bergen)

  Maattrraan- Tamil Film: Lørdag den 13.10.12
  Symra sal 1 Kl 20:15(Oslo)

  Lillestrømkino sal 1 Kl 21:00(Lillestrøm)
  SF Kino Sandvika, Sal 5 Jupiter Kl 21:00(Sandvika)
  Bergen Kino MB 2 KL 17:30(Bergen)

  Maattrraan- Tamil Film: Søndag den 14.10.12
  Symra sal 1 Kl 20:15(Oslo)
  Lillestrømkino sal 1 Kl 21:00(Lillestrøm)
  Bergen Kino MB 2 KL 17:30(Bergen)
  Maattrraan- Tamil Film: Mandag den 15.10.12
  Symra sal 1 Kl 20:15(Oslo)
  Bergen Kino MB 2 KL 17:30(Bergen)
  Maattrraan- Tamil Film: Tirsdag den 16.10.12
  Symra sal 1 Kl 20:15(Oslo)
  Bergen Kino KF 12 KL 17:30(Bergen)
  Maattrraan- Tamil Film: Søndag den 17.10.12
  Symra sal 1 Kl 20:15(Oslo)
  Maattrraan- Tamil Film: Søndag den 18.10.12
  Symra sal 1 Kl 20:15(Oslo)
  Maattrraan- Tamil Film: Søndag den 18.10.12
  Trondheim Kino Nova sal 7 Kl 18:00

  En av musikkvideoene er filmet på Vestlandet. Se NRK-reportasje:

  விவரங்களுக்கு:
  www.vnmusicdreams.com
  http://tv.nrk.no/serie/distriktsnyheter-vestlandsrevyen/dkho99082312/23-08-2012#t=11m

  English summary
  Surya's Maattrraan is the first movie which will be released in big in half a dozen Norwegian cities including Oslo.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more