»   »  விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு மாதவன் கொடுத்த சர்ப்ரைஸ்!

விஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு மாதவன் கொடுத்த சர்ப்ரைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

சென்னை: விஜய் சேதுபதி தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களின் மூலமும் வித்தியாசப்பட்டுத் தெரிகிறார் . இதுவே அவரின் திறமைக்கான தனி அடையாளமாக அமைந்து வருகிறது.

கடந்த எட்டு வருடங்களில் ஒரு ஹீரோவாக மட்டும் தற்போது 25-வது படத்தில் வந்து நிற்கிறார். 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

சில படங்கள் அவருக்கு சுமாராக அமைந்தாலும் மீண்டும் 'நானும் ரௌடி தான்' அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்து அதன்பின்னர் வந்த 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கவண் படம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

'சேதுபதி', 'தர்மதுரை', 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', '96', 'ஜுங்கா', 'சூப்பர் டீலக்ஸ்' என வரிசையாகப் படங்கள் வரவுள்ளது.

சீதக்காதி

சீதக்காதி

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படமான 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் சேதுபதி தானா இது என அவரின் தோற்றம் எல்லோரையும் கேட்க வைத்தது.
இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.

100 ஆண்டுகள் வாழ்க

இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு பலரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. தற்போது நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி 100 ஆண்டுகள் வாழ்க என விஜய் சேதுபதியை வாழ்த்தியுள்ளார்.

மாதவனின் பரிசு

'விக்ரம் வேதா' படத்தில் நடிகர் மாதவனுடன் அவர் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இருவரின் நடிப்பும் மிகவும் பேசப்பட்டது. தற்போது விஜய் சேதுபதியின் பிறந்தநாளில் மாதவன் தன் 'Breathe' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

English summary
Vijay sethupathi's 'Seethakaadhi' First Look has attracted many fans. Vijay Sethupathi had acted with actor Madhavan in 'Vikram Vedha'. Now, By giving surprise to Vijay Sethupathi, Madhavan has released trailer of his 'Breathe' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil