For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  குடைக்குள் மழை சரியாக பெய்யாமல் போய்விட்டாலும் அதில் நடித்த மதுமிதாவின் காட்டிலோ நல்ல மழை.

  இந்த ஆந்திர தேசத்துப் பெண் தனது முதல் படத்திலேயே எக்ஸலண்ட்டான நடித்திருந்தார், கூடவே போதுமானஅளவு காரம், மசாலா மாதிரி கவர்ச்சியிலும் உள்ளே வெளியே.. காட்டியிருந்தார்.

  இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் பாராட்டப்பட்ட மதுமிதாவிடம் திறமை இருப்பதை உணர்ந்து கொண்டுவிட்டகோடம்பாக்கம் அவரைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய வாய்ப்புக்களுடன் பிஸியாக நடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

  அமுதே..

  துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய எழில்டைரக்ஷனில் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக அமுதே என்றொரு படத்தில் நடிக்கிறார். இதில் இன்னொருகதாநாயகியாக உமாவும் இருக்கிறார்.

  எழுத்தாளர் மணிமாலா எழுதிய அழகிய நாவல் தான் படமாக உருவாகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதிரிலீசாக உள்ளதாம் இந்தப் படம்.

  பேர் அண்ட் லைவ்லி..

  இதைத் தவிர பேர் அண்ட் லவ்லி என்ற படத்திலும் நடிக்கிறார் மதுமிதா. இது, இங்கிலீஷ் படமில்லை.. தமிழ் தான்.

  படத்துக்கு இப்படி பெயர் வைத்த தயாரிப்பாளரின் கனவில் டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் வந்து(போஸ்டரை கிழித்துவிட்டுப் போகவே!!) நலம் விசாரித்துவிட்டுப் போகவே படத்துக்கு மாற்றுப் பெயராகசொல்லச் சொல்ல சிவக்குதே என்ற நல்ல தமிழ் பெயரையும் பிலிம் சேம்பரில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

  எதிர்ப்பு வலுத்தால் இரண்டாவது பெயர், இல்லாவிட்டால் சந்தடி சாக்கில் முதல் பெயரிலேயே ரிலீஸ் செய்துவிடும்முடிவில் இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பேர் அண்ட் லவ்லி நிறுவனம் பெரியளவில் நிதியுதவி செய்வதாகதகவல்.

  பாடல் காட்சிகளின் சூட்டிங் நியூசிலாந்து, அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இந்தப் படத்தில் அப்பாஸ் வில்லன்வேடத்தில் நடிக்கவுள்ளார் (அப்பாஸ் நிலைமையைப் பாருங்க..).

  இந்தப் படத்திலும் மதுமிதாவுக்குப் போட்டியாக இரண்டாவது ஹீரோயினாக சிந்தூரி நடிக்கிறார். நடிக்க மதுமிதா,கலக்க சிந்தூரியாம்.

  சாணக்யா..

  இந்தப் படங்கள் தவிர சரத்குமாருக்கு ஜோடியாக சாணக்யா என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம்செய்யப்பட்டிருக்கிறார் மதுமிதா. அமுதேவில் நடிப்புக்கு நல்ல சான்ஸ் என்றால், இதில் உடல் வாகை எடுத்துக்காட்ட நல்ல வாய்ப்பு தரவுள்ளார்களாம்.

  தாராளம் காட்டத் தயார் என்று உறுதியளித்துவிட்டுத் தான் பணத்தை வாங்கியிருக்கிறார் மதுமிதா. சாணக்யாவைஇயக்கப் போவது வெங்கடேஷ். இவர் தான் சரத்குமார்-நமிதாவை வைத்து ஏய் படத்தை இயக்கி வருபவர்.இதிலும் மதுமிதாவுக்குப் போட்டியாக இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார்.

  நீண்ட காலத்துக்குப் பின் தமிழில் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்யவுள்ள படம் இது. படப்பிடிப்பு இமயமலைப்பகுதியில் நடக்கவுள்ளதாம்.

  இயற்கைக் காட்சிகளை அழகாக கேமராவில் கொண்டு வரும் அம்பாட், மதுமிதாவையும் இயற்கையோடுஇயற்கையாய் படம் பிடிக்க இருக்கிறார். படத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டியாக வசனம் எழுதப் போவதுபாலகுமாரன்.

  இந்த மூன்று படங்கள் தவிர மேலும் ஒரு படம் தமிழ்ப் படத்திலும் புக் ஆக இருக்கிறார். சம்பள விஷயத்தில் பேச்சுநடந்து கொண்டிருக்கிறதாம். இப்படி அடுக்கடுக்காய் வாய்ப்புக்கள் வந்து கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டதால்,தத்தித் தத்தி அழகாக தமிழும் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார் மதுமிதா.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X