»   »  மறுபடியும் மதுபாலா!

மறுபடியும் மதுபாலா!

Subscribe to Oneindia Tamil

ஓரம் கட்டப்பட்டு விட்ட மதுபாலா மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால் இப்போது மாண்புமிகு அம்மா வேடத்தில்.

ரோஜா படத்தில் பப்பாளிப் பழம் போல பளபளவென்று வந்து, அழகாக நடித்து, ரசிக நெஞ்சங்களைத் தாலாட்டியவர் மதுபாலா. கனவுக் கன்னி ஹேமமாலியினின் சொந்தக்காரப் பெண்ணான மதுபாலா, தமிழில் பல படங்களில் திறமை காட்டியுள்ளார்.

அழகன் படத்தில் மம்முட்டியை விரட்டி விரட்டிக் காதலிக்கும், குறும்புக் காரப் பெண்ணாக வந்து அசத்தினார். காலப் போக்கில் ஓரம் கட்டப்பட்டு விட்ட மதுபாலா பின்னர் இந்திக்குத் தாவினார். அப்படியே தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களுக்கும் பாய்ந்த மதுபாலா பின்னர் ஏறக்கட்டப்பட்டு விட்டார்.

சுத்தமாக காணாமல் போய் விட்ட மதுபாலா இப்போது மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இங்கல்ல, தெலுங்கில். பழைய பொலிவு மாறாமல், கொஞ்சம் பூசினாற் போல காணப்படும் மதுபாலாவிடம், அந்த குழந்தை முகம் மட்டும் இன்னும் அப்படியே.

தெலுங்கில் மதுபாலா நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு அழகான அம்மா வேடமாம். எனது வயதுக்கேற்ற வேடம்தான். அம்மாவாக நடிப்பதில் தவறே இல்லை என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் மதுபாலா, எனது கவுரவத்திற்கு குறைச்சல் இல்லாத கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் கூறுகிறார்.

மார்வலஸ் மதுபாலா, கீப் இட் அப்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil