»   »  பாதியிலேயே 'பேக்கப்' ஆன மடோனா!

பாதியிலேயே 'பேக்கப்' ஆன மடோனா!

Subscribe to Oneindia Tamil
Madonna
இந்தியாவுக்கு ரகசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாப் ராணி மடோனா தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு கிளம்பி விட்டார்.

புத்தாண்டை இந்தியாவில் கொண்டாட முடிவு செய்த மடோனா, ரகசிய பயணமாக இந்தியாவுக்கு வந்தார். ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு தனது கணவர் கய் ரிச்சி, 3 குழந்தைகளுடன் சென்று குதிரையேற்றம் உள்ளிட்டவற்றை அனுபவித்தார்.

ஆனால் மடோனாவின் ரகசிய பயணம் குறித்த தகவல்கள் மீடியாவில் லீக் ஆனதால் அப்செட் ஆனார் மடோனா.

மாலத்தீவிலிருந்து ஜோத்பூர் வந்த மடோனா, தனது பயணம் குறித்த தகவல் வெளியானதால் கார் டிரைவரைக் கூட மாற்றி விட்டார். பின்னர் ஜெய்சால்மருக்கு அவர் போகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தத் தகவலும் வெளியாகி விட்டதால் அப்செட் ஆன மடோனா தனது இந்திய பயணத்தையே இப்போது ரத்து செய்து விட்டாராம்.

பாப்பராஸ்ஸி தொல்லை இந்தியாவிலும் தொடர்ந்ததால், மடோனா பெரும் அப்செட் ஆகி விட்டாராம்.

Please Wait while comments are loading...