For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |
  தமிழ்த் திரையுலகுக்கு அடுத்த மும்தாஜை ரெடி பண்ணிவிட்டார் விஜய டி.ராஜேந்தர்.

  அவரது வீராசாமி படத்தில் மேக்னா நாயுடு போட்டு வரும் கும்தலக்கா ஆட்டத்தைப் பார்த்துவிட்டுத் தான் இவ்வாறு சொல்கிறார்கள்.

  மும்தாஜை கண்டுபிடித்த மும்பை சினிமா உலகிலிருந்து தான் இந்த மேக்னா நாயுடுவைப் பிடித்து வந்தார் ராஜேந்தர். கூடவே மும்பைமாடலிங் உலகிலிருந்து விபூதி என்பவரையும் கூட்டி வந்தார். விபூதியின் பெயரை நியூமராலஜிப்படி தர்ஷிணி மாற்றி இருவரையும்களமிறக்கிவிட்டார்.

  இதில் தர்ஷிணிக்கு நடிப்பே சுத்தமாக வரவில்லை. சினிமா கேமராவின் முன்னால் கூட ஸ்டில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மாதிரிஆடாமல், அசையாமல் நிற்க, கடுப்பான டி.ஆர். தலையை சிலுப்பிக் கொண்டு, எவ்வளவோ நடிப்பு சொல்லிக் கொடுத்துப் பார்த்தார்.

  கோபத்தில் தலையை சிலுப்பி சிலுப்பி டி.ஆர்ருக்கு கழுத்து வலி தான் வந்ததே தவிர தர்ஷணிக்கு நடிப்பு வரவில்லை. ஒரு கட்டத்தில்அவரை பேக் செய்து மும்பைக்கே வண்டி ஏற்றிவிட்டுவிட்டார் டி.ஆர்.

  அதற்கு முன் தர்ஷணிக்கும் மேக்னாவுக்கு கவர்ச்சி காட்டுவதில் பிரயளமே வெடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தூக்கி சாப்பிட முயல,தர்ஷணிக்கு கொஞ்சம் கூடுதலாகவே ஆதரவு தந்தார் டி.ஆர். இதனால் தர்ஷணியுடன் பேசுவதையே தவிர்த்தார் மேக்னா.

  சூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் முறைப்பதும், வாய்க்குள்ளேயே முனகுவதுமாக பொழுதைக் கழித்தனர். எப்போதுவேண்டுமானாலும் இவர்கள் அடித்துக் கொள்வார்கள் என்ற சூழல் நிலவியபோது தான் தர்ஷணியை ஒதுக்கினார் டி.ஆர்.

  நடிப்பு விஷயத்தில் தர்ஷணி நன்றாகவே ஏமாற்றிவிட மேக்னாவுக்கு படத்தில் வெயிட்டை கூட்டிவிட்டார்.

  இதனால் பூரித்துப் போன மேக்னா, டி.ஆருக்கு தனது நன்றியை அதிகமான உடையிறக்கம் மூலமாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

  என் படத்துக்கு இவ்வளவு கவர்ச்சி எல்லாம் தேவையில்லம்மா என்று டி.ஆர். சொன்னாலும் அவரை செல்லமாக அடக்கிவிட்டு காட்சிக்குக்காட்சி பாயந்து கொண்டிருக்கிறாராம் மேக்னா.

  இந்தப் படத்தில் மேக்னாவுக்கு ஜோடியாக அஜீஸ் என்ற இளைஞர் அறிமுகமாகிறார். அஜீசுக்கு படத்தில் பாதிக்கு பாதி காட்சிகளில் அரைநிர்வாண கோலம் தான் போலிருக்கிறது. அதாவது சல்மான் கான் மாதிரி. வெறும் பேண்டுடன் மேக்னாவை அவர் இறுக்கி அணைக்கும்ஸ்டில்கள் தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

  அஜீஸ் சட்டை போட்ட மாதிரி ஒரு ஸ்டில் இருந்தா குடுங்க டி.ஆர். சார்...

  லாயர்-கம்-தாதாவாக வரும் டி.ஆருக்கு இதிலும் காதலர்களை சேர்த்து வைக்கும் ரோல் தானாம். பேசாம இந்த வேடத்துக்கு இவர்பேடண்ட் ரைட்சே (காப்புரிமை) வாங்கிவிடலாம். நான் தாண்டா மச்சி.. வாழக்கா பஜ்ஜி என செயின் ஜெயபால் கேரக்டரில் ஆரம்பித்தஇந்த காதல் காவலர் வேஷத்தை இவர் இன்னும் விடவில்லை.

  வீராசாமியில் பேட்டை தாதா மாதிரி தனது வெயிட்டை கூட்டிக் காட்ட 4,5 கிலோவுக்கு தங்க செயின்களை அணிந்து நடித்து வருகிறார்டி.ஆர்.

  கூடவே கையில் அரை கிலோ எடையில் தாமிர காப்புகள், இடுப்பில் 2 கிலோ மதிக்கத்தக்க இரும்பு பெல்ட், தாமரைக்கனி ஸ்டைலில்விரல்களை மறைக்கும் பட்டை மோதிரங்கள் என பல்வேறு உலோகங்களை பயன்படுத்தியுள்ளார் டி.ஆர். இதனால் டி.ஆர். கேரக்டரின்வெயிட் கூடுகிறதோ இல்லையோ நிஜ வெயிட் கூடியிருப்பது என்னவோ உண்மை.

  டி.ஆருக்கு இதில் ஜோடி நம்ம மும்தாஜ் என்பது உங்களுக்குத் தெரியும். இதில் டி.ஆரும் மும்தாஜும் ஒரு டப்பாங்குத்து ஆட்டம்போட்டிருக்கிறார்களாம். இதற்காக வீட்டிலேயே தினமும் மணிக்கணக்கில் நடனப் பயிற்சி எடுத்தாராம் ராஜேந்தர். தனது குருநாதர்என்பதால் அதிகமான ஹிப் மூவ்மெண்ட்ஸ் கொடுத்து அசத்திவிட்டாராம் மும்ஸ்.

  வழக்கம்போல் கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, டைரக்ஷன் தயாரிப்பு என எல்லா வேலைகளையும் டி.ஆர். தான்பார்க்கிறார். போஸ்டர் ஒட்டும் வேலையைத் தவிர!

  படத்துக்கு விஜய. டி.ராஜேந்தர் வைத்திருக்கும் பன்ச் லைன் என்ன தெரியுமா?

  For him (Veerasamy) love is God!.. For love he is the Guard !!"

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X