மன்னாதி மன்னன்!!

இந்தப் படத்தின் உரிமையைப் பெற்றுள்ளவர் கலைப்புலி தாணு. அஜீத்தை வைத்து மகாதீராவை ரீமேக் பண்ண முடிவு செய்தவருக்கு, படத்தின் பட்ஜெட்டைக் கேட்டதும், இது தேவைதானா என்னும் அளவுக்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
மகாதீராவின் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கு மேல் வருகின்றவாம். இதற்காகும் செலவில் புதிதாக ஒரு படமே எடுத்துவிடலாம் என்பது ஒரு பக்கம். ஒரிஜினல் படத்தில் உள்ளது போலவே ரீமேக்கிலும் செய்வார்களா என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டதாம்.
எனவே, படத்தை அப்படியே டப் செய்து வெளியிட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்த தாணு, படத்தின் காமெடி ட்ராக்கை மட்டும் விவேக்கை வைத்து புதிதாக எடுக்கச் சொல்லிவிட்டாராம்.
இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கையும் தானே பேசியுள்ளார் ராம் சரண் தேஜா. தாய்மொழி தெலுங்கு என்றாலும் படித்தது வளர்ந்தது சென்னை என்பதால், அவருக்கு மொழி ஒரு பிரச்சினையில்லை. அவரது தந்தை சிரஞ்சீவியும் மகாதீராவில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கான டப்பிங்கை சிரஞ்சீவியே பேசிக் கொடுத்துள்ளாராம்.
காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
ஒரு டப்பிங் படம் என்ற உணர்வே இல்லாமல் தயார் செய்துள்ளார்களாம்... எல்லாம் சரி... படத்துக்கு தமிழில் என்ன தலைப்பு தெரியுமா?
மன்னாதி மன்னன்!


Click it and Unblock the Notifications











