Mahesh Babu Birthday: பிரைவேட் ஜெட், பங்களா வீடு, சொகுசு கார்.. மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இதோ!
ஹைதராபாத்: சவுத் இந்தியா பிரின்ஸ் என்றும் டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் மகேஷ் பாபு இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கெத்துக் காட்டி வரும் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டும் நல்ல காரியங்களை செய்தும் கொண்டாடி வருகின்றனர்.
பர்த்டே பாய் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு பற்றியும் அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்..

வாரிசு நடிகர்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன் தான் மகேஷ் பாபு. இந்தியா முழுவதும் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதை போலவே டோலிவுட்டில் மகேஷ் பாபு தனது ஆதிக்கத்தை பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறார். 1979ம் ஆண்டு நீடா எனும் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேஷ் பாபு, 1999ல் ராஜகுமாரடு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

47வது பிறந்தநாள்
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி பிறந்த மகேஷ் பாபு இன்று தனது 47வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்ட மகேஷ் பாபுவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவரது ஆளுயர சிலை நிறுவப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தனை கோடியில் பங்களாவா
ஒக்கடு, போக்கிரி, தூக்கடு, ஸ்ரீமந்துடு, பரத் அனி நேனு, மகரிஷி, சரிலேரு நீக்கெவ்வரு, சர்காரு வாரி பாட்டா என ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்துள்ள மகேஷ் பாபுவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தின் போஷ் ஜூபிளி ஹில்ஸ்ஸில் 28 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட பங்களா உள்ளது.

பிரைவேட் ஜெட்
அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு ஹாலிடேவுக்காக பறந்து செல்ல சொந்தமாக ஒரு பிரைவேட் ஜெட்டையே வாங்கி வைத்திருக்கிறார் மகேஷ் பாபு. மேலும், 2.24 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், 1.19 கோடி மதிப்புள்ள ஆடி இ ட்ரான் கார் உள்ளிட்ட கார்களும் இவரிடம் உள்ளன.

சொத்து மதிப்பு
சமீபத்தில் தனது சம்பளத்தை 80 கோடி ரூபாய்க்கு உயர்த்தி உள்ளார் மகேஷ் பாபு. இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு 244 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜமெளலி உடன் மகேஷ் பாபு இணையும் படத்துக்கு சம்பளம் 100 கோடியை நெருங்கும் என்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











