»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும் ...

இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர்,புரட்சி நடிகர் என்று மக்களாலும், தொண்டர்களாலும் போற்றப்பட்டஎம்.ஜி.ராமச்சந்திரன். சினிமாவையும், அரசியலையும் இரு கண்களாகப் பார்த்தவர்.

திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்து பல காலம் முடிசூடா மன்னனாகத்திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என மக்களால் அன்பாக அழைக்கப்பட்டஎம்.ஜி.ராமச்சந்திரன். இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆர். பிறந்தநாள்.

எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயரே மறைந்து எம்.ஜி.ஆர். என்ற பெயரே அவருக்குநிலைத்து விட்டது. நடிப்பிலும் சரி, பின்னர் தேர்ந்தெடுத்த அரசியலிலும் சரி தனதுமுத்திரையைப் பதித்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் என்ற பெயருக்கு இருந்த செல்வாக்கு, 1987-ம் ஆண்டு அவர் நோயில்விழுந்தபோது தமிழகம் கண்டது. எமனே, எங்கள் உயிரை எடுத்துக் கொண்டுஎம்.ஜி.ஆரை. பிழைக்க வை என்று கூறி 22 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்ட எம்.ஜி.ஆர்,இலங்கையிலுள்ள கண்டியில், 1917-ம் ஆண்டு பிறந்தார். எம்.ஜி.ஆர். பிறந்த சிலவருடங்களிலேயே அவரது குடும்பத்தினர் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தனர்.எம்.ஜி.ஆருக்கு 6 வயது இருக்கும்போது, கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக் குழுவில் எம்.ஜி.ஆர் சேர்த்து விடப்பட்டார். நடிப்பு,நடனம், கத்திச் சண்டை ஆகியவற்றைப் பயின்றார் சின்ன எம்.ஜி.ஆர்.

திரைத்துறையில் எம்.ஜி.ஆர். நுழைந்த ஆண்டு 1936. எல்லீஸ் ஆர் டங்கனின் சதிலீலாவதி மூலம் திரைத்துறையில் நுழைந்தார் புரட்சி நடிகர் என்று பின்னாள்போற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சதி லீலாவதியில் துவங்கினாலும் கூட எம்.ஜி.ஆருக்குப்பெயர் பெற்றுத் தந்தது ராஜகுமாரிதான் (1947).

1950-களில் எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் அரசியல் தொடர்பானது.அந்தக் கால சரித்திரங்கள் பல படமாயின. அனைத்திலும் எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும்வீரனாக சித்தரிக்கப்பட்டார். அவரது உடல்வாகும், கத்தியை சுழற்றியதையும் பார்த்துபாதி தமிழகம் அவரிடம் வீழ்ந்தது. மதுரை வீரன் (1956), எம்.ஜி.ஆருக்கு பெரும்ரசிகர் கூட்டத்தைப் பெற்றுத் தந்தது.

1960-களுக்குப் பிறகு எம்.ஜி.ஆருடைய திரை முகம் மாறியது. சமூகக் கருத்துக்கள்கொண்ட படங்களில் நடிக்கத் துவங்கினார். அவரது பாடல்களில் தத்துவங்கள் தெரித்துவிழுந்தன. சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தனது கதா பாத்திரங்கள் மூலம்வெளிப்படுத்தினார். விவசாயியாக, டாக்சி டிரைவராக, மீனவராக அவரதுகதாபாத்திரங்களின் வீச்சு வெளிப்பட்டது.

அவரது பெரும்பாலான படங்களில் தாய்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.அநிதீயை எதிர்த்து போராடும் வீரனாக ஒரு படத்தில் நடித்தால் மறு படத்தில்,பெண்களை மதிக்கும் கதாநாயகனாகவும் அவர் சித்தரிக்கப்படுவார். இதனால்பெண்களின் ஆதரவு அவருக்கு என்றும் அதிகமாக இருந்தது.

தாய் மொழி, தாய்நாடு என்று எல்லாக் கட்டங்களிலும் தாய்மைக்கு முக்கியத்துவம்கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

கெட்ட பழக்கங்களை கடுமையாக எதிர்த்தவர் எம்.ஜி.ஆர். தான் நடித்த எந்தப்படத்திலும் குடிப்பது, சிகரட் பிடிப்பது, ரவுடியாக வருவது போன்ற எந்த பாத்திரமும்வராமல் பார்த்துக் கொள்வார். நிஜத்திலும் அப்படியே இருந்தார்.

அவரது படங்கள் பெரும்பாலும், பொழுது போக்கு சித்திரமாக மட்டுமல்லாமல்,அறிவுரை கூறும் தோழனாகவும் இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துதிருந்தியவர்கள், வருந்தியவர்கள், தவறுகளை உணர்ந்தவர்கள் ஏராளம் உண்டுதமிழகத்தில்.

எம்.ஜி.ஆர். 1953-ல் அரசியலில் நுழைந்தார். அவர் முதலில் சேர்ந்த கட்சி திமுக.1972 வரை அதில் இருந்தார். அவர் புகழின் காரணமாக தி.மு.க. விற்கும் பெரும் புகழ்கிடைத்தது என்றால் அது மிகையாகாது.

அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதி தி.மு.க.வின் தலைமை பொறுப்பைஏற்றார். பல காலம் தி.மு.க.வில் அங்கம் வகித்தார் எம்.ஜி.ஆர். பின்னர் அவருக்கும்,திமுக பொதுச் செயலாளராக இருந்த கருணாநிதிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.அக்கட்சி பின்னர் சரித்திரம் படைத்தது என்பது சொல்ல வேண்டியதில்லை.

1962 முதல் 64 வரை எம்.ஜி.ஆர். மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) இருந்தார்.1967-ல் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967-ம் ஆண்டு நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை, அவரது வீட்டில் வைத்துதுப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்த எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.ஆனால் குரலை இழந்தார்.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். தனது திரையுலக செல்வாக்கை தனதுகட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். அவர் நடித்து வந்த நம் நாடு, முழுக்க,முழுக்க ஒரு பிரசாரப் படமாகவே இருந்தது.

1977-ல் அதிமுக , இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துசட்டசபைத் தேர்தலைச் சந்தித்து பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தின்முதல்வராகப் பதவியேற்றார் எம்.ஜி.ஆர். மூன்று முறை தொடர்ந்து முதல்வராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோது, திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள் அவரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு, அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.

அவரது கட்சி முதல் முறை தேர்தலில் போட்டியிட்ட போது 17 இடங்கள் மட்டுமேபெற்றது. ஆனால் அதன் பின் அவர் ஆட்சியை பிடித்தது சரித்திரம். இறக்கும் வரைமுதல்வராக இருந்தார்.

ஒரு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து வந்ததேர்தலிலும் பெரும்பான்மை பலத்துடன் வந்து ஆட்சி அமைத்து மக்கள் தன் மேல்வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபித்தார்.

இந்தியாவில், ஒரு நடிகரால் ஆட்சியும் நடத்த முடியும் என நிரூபித்தவர் இவர்தான்.

மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்தார்எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் அவருக்கு ஏழை மக்களின் இதயத்தில் தனி இடம்ஏற்படுத்திக் கொடுத்தது.

எம்.ஜி.ஆர். 1984-ம் ஆண்டு முதல் முறையாக பெரிய அளவில் உடல் நலம்பாதிக்கப்பட்டார். பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டன. அமெரிக்காவில்சிகிச்சை முடிந்து திரும்பினார். அங்கு இருந்தபோது நடந்த சட்டசபைத் தேர்தலில்தொகுதிக்கு வராமலேயே வெற்றி பெற்றார்.

தமிழகம் திரும்பி, உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினார். 1987-ம்ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தமிழக மக்களுக்கு மறக்க முடியாத நாள். அன்றையகாலை, தமிழக மக்களுக்கு சோக காலை. மறைந்தார் எம்.ஜி.ஆர். என்ற செய்தியைஅறிந்து தமிழகமே கண்ணீர் கடலில் ஆழ்நதது.

தமிழகத்தின் அனைத்து சாலைகளும் சென்னையை நோக்கி திரும்பின. சென்னைமுழுதும் மக்கள் வெள்ளம். மக்கள் கண்ணில் கண்ணீர் வெள்ளம். தங்கள் தலைவருக்குஅஞ்சலி செலுத்தி அவரை சென்னை கடற்கரையில் உறங்க வைத்து உறைந்ததுதமிழகம்.

கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரரான அந்த மனிதர், இன்றும்கிராமங்களில், ஏழை உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

Read more about: cinema, mgr, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil