»   »  மலைக் கோட்டை விறு விறு!

மலைக் கோட்டை விறு விறு!

Subscribe to Oneindia Tamil

விஷால் நடிக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தி்ல மலைக்கோட்டை படு விறுவிறுப்பாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன் முதல் முறையாக விஷாலுடன் இணைந்துள்ள படம்தான் மலைக்கோட்டை.

முதலில் திரிஷா நடிப்பதாக இரு்நதது. ஆனால் எநத நேரத்திலும் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்திறகு அழைப்பு வரலாம் என எதி்ர்ப்பார்ப்பதால் மலைக்கோட்டையிலிருந்து பாதியிலேயே இறங்கி விட்டார் திரிஷா.

இதையடுத்து முத்தழகி பிரியாமணியை ஜோடியாக்கி விட்டனர். பருத்தி வீரனைத் தொடர்ந்து மலைக்கோட்டை மூலம் தனது வெற்றி பவனியை தொடர தீர்மானித்துள்ள பிரியா மணி அதற்கேற்ப இப்படத்தில் திறமை காட்டவுள்ளார்.

படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். படத்தின் கதை குறித்து பூபதி பாண்டியன் கூறுகையில்,காமெடி கலந்த விறுவிறுப்பான படம் மலைக்கோட்டை.

திருச்சிக்கு ஹீரோ விஷால் வருகிறார். ஒரு மாதம் தங்குகிறார். அங்கு பிரியா மணியை சந்திக்கிறார். மனதைப் பறிகொடுக்கிறார். காதல் மலருகிறது. காதலைச் சொல்லும்போது ஒரு பிரச்சினை எழுகிறது. அதை எப்படி சமாளிக்கிறார், பிரியா மணியிடம் காதலைச் சொல்லுகிறாரா என்பதுதான் படத்தின் கதை என்றார் பூபதி.

படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தியும், கன்னட நடிகர் தேவராஜும் வில்லன்களாக வருகிறார்களாம். தேவராஜ், கன்னடத்தில் வீரப்பன் கதை படமானபோது அதில் வீரப்பனாக நடித்து அசத்தியவர். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள தேவராஜ் ஆரம்பத்தில் வில்லனாகத்தான் கன்னடத்தில் அறிமுகமானவர்.

இப்போது தமிழ் மூலம் மீண்டும் வில்லனாக வேடம் போடுகிறார்.

சிரிக்க வைக்கும் முயற்சியி்ல் மயில்சாமியும்,மனோபாலாவும் ஈடுபடுகிறார்களாம். உனக்கும் எனக்கும் வெற்றிப் படத்தைக் கொடுத்த அஜய்குமாரின் ஸ்ரீலட்சுமி புரடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. மணி சர்மா இசையமைக்கிறார்.

கோட்டையை பலமா கட்டுங்க பூபதி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil