»   »  மலைக்கோட்டை ஹிட்!

மலைக்கோட்டை ஹிட்!

Subscribe to Oneindia Tamil


விஷால், ப்ரியா மணியின் நடிப்பில் வெளியாகியுள்ள மலைக்கோட்டை படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதால், மொத்த யூனிட்டும் சந்தோஷமாகியுள்ளதாம்.

Click here for more images

பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலைக்கோட்டை, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. வெளியிட்ட இடமெல்லாம் படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறதாம்.

முதல் முறையாக விஷால் இப்படத்தில் ஆக்ஷனுடன், காமெடியிலும் கலக்கியுள்ளார். இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளது விஷாலுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.

சென்னையில் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாம். அனைத்து தியேட்டர்களிலும் அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

விஷால், ப்ரியா மணி தவிர கன்னடத்து தேவராஜ் வில்லனாக நடித்துள்ளார். ஊர்வசியும் முக்கியப் பாத்திரத்தில் வருகிறார். ஆசிஷ் வித்யார்த்தியும், ஊர்வசியும் சேர்ந்து காமெடியில் ரவுசு பண்ணியுள்ளனர். இவர்களின் காட்சிகளுக்கு ரசிகர்களிடம் செமத்தியான வரவேற்பாம்.

படம் குறித்து பூபதி பாண்டியன் கூறுகையில், எனது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுதான் எனது பலமும் கூட. ஆனால் முதல் முறையாக ஆக்ஷனுடன், காமெடியைக் கலந்து கொடுத்துள்ளேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இந்த ஆதரவும், ஊக்கமும், எனக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. வணிக ரீதியாலன படங்களில் பல பரீட்சார்த்தங்களை செய்து பார்க்க இது உந்துதலாக அமைந்துள்ளது என்றார்.

Read more about: malaikottai, priyamani, vishal
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil