»   »  மருதமலையை 'தகர்த்த' மலைக்கோட்டை!

மருதமலையை 'தகர்த்த' மலைக்கோட்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil


விஷாலின் மலைக்கோட்டை, அர்ஜூனின் மருதமலையை ஓவர்டேக் செய்துள்ளது. இந்த வாரத்தில் மலைக்கோட்டைதான் கோலிவுட்டின் நம்பர் ஒன் படமாக உள்ளது.

Click here for more images

அதிரடி நாயகனாக கலக்கி வந்த விஷால் காமெடியிலும் அசத்தியுள்ள படம் மலைக்கோட்டை. வெள்ளிக்கிழமை ரிலீஸான மலைக்கோட்டை பெரும் ஆகியுள்ளது. நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த மருதமலையை ஓவர் டேக் செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது மலைக்கோட்டை. ஆனால் வடிவேலுவின் புண்ணியத்தால் மருதமலை சீக்கிரமே மீண்டும் நம்பர் ஒன்னுக்கே வரும் என்கிறது கோலிவுட் தகவல்.

1. மலைக்கோட்டை - இயக்கம் பூபதி பாண்டியன். பருத்தி வீரனில் கலக்கிய ப்ரியா மணி இதில் வெறும் கவர்ச்சிப் பதுமையாக வந்து போயுள்ளார். இப்போதைக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. தக்க வைக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

2. மருதமலை - இயக்கம் சுராஜ். வடிவேலுவின் கலக்கல் காமெடியில், அர்ஜூனின் அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளில், நிலாவின் கவர்ச்சியி்ல உருவாகியுள்ள மருதமலை, அனைத்து அம்சங்களும் கலந்த அட்டகாசமான பொழுது போக்குச் சித்திரம். தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது மருதமலை.

3. சிவாஜி - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படமான சிவாஜி 100 நாட்களைத் தாண்டிய நிலையில் தற்போது மற்ற படங்களுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளது. சென்னையில் 7 தியேட்டர்களிலும், புறநகர்களில் 5 தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

4. நம் நாடு - இயக்கம் சுரேஷ். சரத்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள லயன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான நம்நாடு, பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

5. உடம்பு எப்படி இருக்கு? - இயக்கம் ஜீவிதா ராஜசேகர். இதுவும் லயன் படத்தின் ரீமேக்தான். தெலுங்கில் ரீமேக் ஆகி அங்கிருந்து தமிழுக்கு டப் ஆகியுள்ளது. சில காட்சிகளில் நம் நாட்டை விட நன்றாக உள்ளது. இது எப்படி இருக்கு?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil