»   »  மீண்டும் குதிக்கும் மாளவிகா

மீண்டும் குதிக்கும் மாளவிகா

Subscribe to Oneindia Tamil

கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்து விட்ட மாளவிகா தேனிலவையும் சிறப்பாக முடித்து விட்டு மீண்டும் நடிப்புக்கு வரப் போகிறார்.

கேரளத்து சுமேஷ் மேனனை காதலித்து கரம் பிடித்துள்ள மாளவிகா தேனிலவை ஐரோப்பாவில் அட்டகாசமாக என்ஜாய் செய்யவுள்ளார். அதை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய பின்னர் மீண்டும் நடிப்பில் தீவிரமாக குதிக்கிறார்.

கல்யாணமாகி விட்டாலும் கூட தொடர்ந்து ஹீரோயினாகத்தான் நடிப்பாராம். அக்கா, அம்மா வேடத்தில் நடிக்கும் பேச்சுக்கே இடமில்லையாம்.

அப்ப, கட்டுவிரியன் படத்தில் மட்டும் ஆத்தா வேடம் போட்டிருக்கீங்களே என்று கேட்டால், அதில் அம்மா வேடத்தில் நடித்திருந்தாலும், தலை நரைச்ச அம்மாவாக நடிக்கவில்லை. இளமையான அம்மாவாக்ததான் நடித்திருக்கிறேன் என்று புன்முறுவல் பூக்கிறார்.

அம்மாவாக இருந்தாலும் நான் இளமை பொங்கத்தான் நடிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையிலேயே நான் அம்மா வயசுக்கு வரும்போதுதான் வயதான அம்மாவாக நடிப்பேன். இளமை இருக்கும் வரை அதற்கேற்ற வேடங்களில்தான் நடிப்பேன் என்கிறார் தெளிவாக.

சுமேஷ் மேனன் அலுமினியத் தொழிற்சாலை வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறாராம். கணவருக்கு தொழிலில் உதவி புரிவீர்களா என்று கேட்டால், அது அவர் தலைவலி, நான் எதுக்கு உள்ளே புகுந்து குழப்பனும், என் வேலை நடிப்பு மட்டும்தான் என்று எஸ்கேப் ஆனார் மாளவிகா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil