»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

* பிதாமகன் படத்திற்கு இன்னொரு ஹீரோயினைத் தேடிக் கொண்டே இருந்தார் இயக்குனர் பாலா. இந்நிலையில் சான்ஸ் கேட்டு வந்து நின்றார் மாளவிகா. கப் என அவரைப் பிடித்துப் போட்டுவிட்டார் பாலா.

கன்னடம், விளம்பரப் படங்கள் மற்றும் ஒரு ஆங்கில சாப்ட் போர்ன் படத்தில் நடித்து வரும் மாளவிகாவுக்குதமிழ் ஆசை போகவில்லை. தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார். தனது பல வகையான போஸ்ஆல்பங்களை அனுப்பிபடி இருந்தார். முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துவிட்டது.

* தொடர்ந்து அம்மா, அக்கா, பாட்டி வேடங்களில் நடிக்க சுகாசினி முடிவெடுத்து விட்டார். பாரதிராஜா இயக்கும்ஈர நிலம் படத்தில் பாட்டி வேடத்தில் நடித்து வரும் சுகாசினிக்கு அந்தக் கேரக்டர் ரொம்பவே பிடித்து விட்டதாம்.

இதில் தனது நடிப்பு அதிகம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் உள்ளாராம். இதே டைப் கேரக்டர்கள் இருந்தால்நடிக்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.

* படத்தை முடித்தும் கூட த்ரீரோஸஸை ரிலீஸ் செய்ய முடியாமல் தொடை நடுங்கிக் கொண்டிருக்கிறார் ரம்பா.எல்லாம் கடன் தொல்லைதானாம். கடனை அடைத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்யுமாறு சசி கும்பலுக்கு வேண்டியஅன்பான மதுரை பைனான்சியர் கண்டிப்பாக உத்தரவு போட்டு விட்டாராம்.

கடனை எப்படி அடைப்பது, படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறாராம் ரம்பா.அன்பான பைனான்சியரிடம் வாங்கிய பணம் போதாமல் இந்தி நடிகர் கோவிந்தாவிடம் பெரும் பணத்தை கடன்வாங்கித் தான் படத்தை முடித்தார் ரம்பா. இப்போது பல பக்கமும் கடன். படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல். ரம்பாபாவம் தான்.

* விஜய் நடிக்கும் திருமலை படத்தில் ஜோதிகாவுக்குக் கிடைத்த வாய்ப்பு முதலில் சிம்ரனுக்குத்தான்போகவிருந்ததாம். ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதால், ஜோதிகாவைத் தேடி வந்ததாம்.

ஜோதிகா ரொம்பவேபிகு செய்து அப்புறம் நடிகர் சூர்யா சொல்லித் தான் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியும்தானே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil