»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பேரழகன் படத்தில் ஒரு பாட்டு டான்ஸ் ஆடியுள்ளார் மாளவிகா.

நீண்ட நாட்களாக தமிழில் வாய்ப்பில்லாமல் அலைந்த மாளவிகா, தெலுங்கு, தாய்மொழி கன்னடம்ஆகியவற்றிலும் தோற்றுப் போய் ஹிந்திக்குப் போனார். அங்கும் வாய்ப்பில்லாததால் அப்படியேமும்பையில் மாடலிங்கில் நுழைந்தார்.

இப்போது மாடலிங்கில் மாளவிகா பிஸியாக இருக்கிறார். ஆனாலும் தமிழிலும் தெலுங்கிலும்தொடர்ந்து முயன்ற வண்ணம் இருக்கிறார்.

பிதாமகனில் இவரை கஞ்சா விற்கும் பெண் கேரக்டருக்கு தேர்வு செய்த பாலா, அந்த கேரக்டருக்குஇவர் பொறுந்ததாதால், ஓரிரு நாள் சூட்டிங் நடத்திவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார். அந்தஇடத்தை பின்னர் ரசிகா பிடித்தார்.

இந் நிலையில் சூர்யா உள்ளிட்ட பலரையும் சந்தித்து சான்ஸ் கேட்டார் மாளவிகா. இதன் பலனாகபேரழகன் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தி கலக்கல் ஆட்டம் போட்டிருக்கிறார் மாளவிகா. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அம்புலி மாமா நான்தானே என்ற பழனிபாரதியின் டமுக்கு டப்பாபாடலுக்கு ஆடி அசத்தியிருக்கிறார் மாளவிகா.

அம்பாசமுத்திரம், நாகர்கோவில், கன்னியாகுமரி என இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது இந்தப் பாடல். டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவின் படுவேக மூவ்மெண்ட்ஸைதாக்குப் பிடித்து, கவர்ச்சியையும் கலந்து சூப்பர் ஆட்டம் போட்டாராம் மாளவிகா.

இதில் ஆடியதோடு உடனடியாக ஊருக்குத் திரும்பவில்லை மாளவிகா. தொடர்ந்துசென்னையிலேயே தங்கி, என்ன ரோல் வேண்டுமானாலும் சரி, கொடுங்க என்று தயாரிப்பு நிறுவனபடிகளிலும் ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறார்.

அசத்தல் அழகுடன் இருக்கும் மாளவிகாவை தமிழ் சினிமா ஏன் ஒதுக்கியது என்று புரியவில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil