»   »  ப்ரியாவுக்கு 'மலையாள' ஆதரவு

ப்ரியாவுக்கு 'மலையாள' ஆதரவு

Subscribe to Oneindia Tamil


நடிகை பத்மப்ரியாவை இயக்குநர் சாமி அடித்தது தவறு என்று மலையாள நடிகைகளும், மலையாள திரைப்பட நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Click here for more images

பத்மப்ரியாவின் பூர்வீகம் பாலக்காடு என்பது பலருக்கும் தெரியும். அந்த அடிப்படையில் தற்போது சாமியிடம் அடி வாங்கிய விவகாரத்தில் மலையாள நடிகைகள், மலையாள நடிகர் சங்கம் ('அம்மா') ஆகியவை பத்மப்ரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.

இதே அம்மா சங்கம்தான், முன்பு பத்மப்ரியா, மலையாள டப்பிங் கலைஞர்கள் குறித்து மதிப்புக்குறைவாக பேசியபோது பத்மப்ரியாவுக்கு கண்டனம் தெரிவித்தது. பின்னர் மன்னிப்பு கேட்டார் பத்மப்ரியா.

இந்த நிலையில் பத்மப்ரியா, சாமியிடம் அடி வாங்கிய விவகாரத்தில் பத்மப்ரியாவுக்கு ஆதரவாக அம்மாவும், பிற மலையாள நடிகைகளும் குரல் கொடுத்துள்ளனர்.

தமிழிலும் நடித்துக் கொண்டிருக்கும் மலையாள நடிகைகளான கோபிகா, நவ்யா நாயர், பாவனா, கார்த்திகா, கீது மோகன்தாஸ் ஆகியோர் சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கோபிகா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு, இதுபோல எனக்கு நடந்திருந்தால் அந்த இயக்குநரை எனது தந்தை சும்மா விட்டிருக்க மாட்டார். உரிய முறையில் கவனித்திருப்பார் என்று கோபமாக கூறியுள்ளார்.

கோபிகா கூறுகையில், சம்பவத்தை கேட்டவுடன் துடிதுடித்துப் போனேன்.

படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போது எந்த தப்பு செய்தாலும் டைரக்டருக்கு அடிக்கவெல்லாம் உரிமை கிடையாது. நான் இதுவரை 9 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்தவொரு டைரக்டரும் என்னிடம் இதுபோல் நடந்து கொண்டதில்லை என்றார்.

பாவனா கூறுகையில், நடிக்க வரவில்லை என்பதற்காக நடிகையை அடிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நடிகையை அடிச்சால் நடிப்பு வந்து விடுமோ. இப்படிப்பட்ட சம்பவத்தை நான் இதுவரை எங்கேயும் கேள்வி பட்டதில்லை என்றார்.

'அம்மா' சங்கத் தலைவரான நடிகர் இன்னொசன்ட் கூறுகையில், பத்மப்ரியாவை இயக்குநர் சாமி அடித்தது அறிந்து அனைத்து மலையாள நடிகர்-நடிகையர்களும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். இயக்குநர் சாமியின் செயலை மலையாள நடிகர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
என்று கூறினார்.

நம்ம ஊர் நடிகர் சங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: director, padmapriya, samy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil