»   »  சிம்ரனின் ரூ. 2 கோடி மிரட்டல்:சந்திக்க தயார்- தயாரிப்பாளர்

சிம்ரனின் ரூ. 2 கோடி மிரட்டல்:சந்திக்க தயார்- தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் வெளியாகியுள்ள ஹார்ட்பீட்ஸ் படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக தன்னை சித்தரித்துள்ளதற்காக வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ள நடிகை சிம்ரனின் சவாலை சந்திக்கத் தயார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஜாலி ஜோசப் கூறியுள்ளார்.

கல்யாணத்திற்குப் பிறகு தமிழில் வாய்ப்பு தேடி கடுமையாக முயன்றும் ஒன்றும் கிடைக்காத கவலையில் இருந்து வந்த சிம்ரனுக்கு மலையாள படத் தயாரிப்பாளர் ஜாலி, தனது ஹார்ட் பீட்ஸ் படத்தில் வாய்ப்பளித்தார். இதில் பிரபல நடிகர் பிருத்விராஜின் தம்பி இந்திரஜித் ஹீரோவாக நடித்திருந்தார். வினு ஆனந்த் இயக்கியிருந்தார்.

இப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தைப் பார்த்தவர்கள் சிம்ரன் கேரக்டரைப் பார்த்து அதிர்ந்து விட்டனர். காரணம் எய்ட்ஸ் நோயாளியாக அதில் நடித்திருந்தார் சிம்ரன். மேலும் படத்தின் இறுதியில் எய்ட்ஸ் முற்றி இறந்து போவதாக அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பலரும் சிம்ரனிடம் விசாரித்துள்ளனர். இதைக் கேட்ட சிம்ரன் ஷாக் ஆகி விட்டார். காரணம், தான் எய்ட்ஸ் நோயாளி கேரக்டரில் நடித்தது அவருக்கே தெரியாதாம்.

இதுகுறித்து சிம்ரன் கூறுகையில், படத் தயாரிப்பின்ேபாதே எனக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டது. படக் கதையின் போக்கு எனக்குப் பிடிக்காததால் நான் பாதியிலேயே படத்திலிருந்து விலகி விட்டேன்.

பின்னர் நான் இல்லாமலேயே படத்தை தொடர்ந்து முடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் என்னை எய்ட்ஸ் நோயாளியாக சித்தரித்துள்ளதாகவும், நான் எய்ட்ஸ் தாக்கி இறந்து போவது போலவும் காட்டியிருப்பதாக பலரும் என்னிடம் கூறினர்.

இதைக் கேட்டு நான் அதிர்ந்து விட்டேன். என்னிடம் ெசான்ன கதையை படமாக்காமல் வேறு மாதிரியாக எடுத்துள்ளனர். என்னிடம் சொன்ன கதை வேறு, இப்போது வெளியாகியுள்ள கதை வேறு. இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

புதுமுகங்கள் அதிகம் பேர் நடித்திருந்தாலும் கூட அதுபற்றிக் கவலைப்படாமல் நான் இப்படத்தில் நடித்ேதன். படத்தின் ஒரிஜினல் கதை உண்மையிலேயே என்னைக் கவர்ந்தது. ஆனால் படப்பிடிப்பின்போது கதையை மாற்றி படமாக்கினார் இயக்குநர். இதனால்தான் நான் படத்திலிருந்து விலகி விட்டேன்.

படத்தில் என்னை எய்ட்ஸ் நோயாளியாக காட்டியிருந்தால் நிச்சயம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்கு தொடருவேன்.

எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக தயாரிப்பாளரும், இயக்குநரும் ரூ. 2 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடருவது உறுதி என்று கூறியிருந்தார்.

ஆனால் தயாரிப்பாளர் ஜாலி ஜோசப் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிம்ரனுக்கு இப்படத்தில் நடித்ததற்காக முழுச் சம்பளத்தையும் கொடுத்து விட்டோம். எனவே படத்தை எங்களது விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது.

ஒப்பந்தத்தை மீறி பாதியிலேயே படத்திலிருந்து விலகினார் சிம்ரன். இருந்தாலும் அதை நாங்கள் பிரச்சினை செய்யாமல் படத்தை முடித்து வெளியிட்டோம்.

அவர் எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க நாங்கள் தயாராககவே இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஹார்ட்பீட்ஸுக்காக கோர்ட் படி ஏறுவாரா சிம்ரன்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil