»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படக் கதைகளை சுட்டுப் படமெடுக்கும் புதுப் பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர் மலையாள திரையுலகினர்.

வங்காள மொழிப் படங்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சிறந்த படங்களைத் தயாரிப்பது மலையாளம் தான்என்று நம் ஊர்களில் டீக்கடை வைத்திருக்கும் நாயர்கள் காலர் தூக்கி விட்டுக் கொண்ட காலமெல்லாம்போய்விட்டது.

கமெர்ஷியல் சினிமாவுக்குள் மாட்டிக் கொண்டு கேரளப் படவுலகமும் திண்டாடுகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடசினிமா வரிசையில் இப்போது கேரள நாட்டவரும் தமிழ் சினிமாவைக் காப்பியடிக்க ஆரம்பித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு "கருமாடிக் குட்டன்" என்ற படம் வந்தது. கமல்ஹாசன் நடித்து பல ஆண்டுகளுக்குமுன்பு வெளியான 16 வயதினிலே படத்தை அப்படியே சுட்டு கலாபவன் மணி, கெளசல்யாவை வைத்து ஷூட்செய்திருந்தார்கள்.

ஆனால் இந்தப் படம் 16 வயதினிலே படக் கதை கிடையாது என்றும் சப்பைக் கட்டுக் கட்டியிருந்தார்கள்.

இந் நிலையில் தற்போது இன்னொரு மலையாளப் படம் தமிழ்ப் படக் கதையை தழுவி வெளியாகி சூப்பர் ஹிட்ஆக ஓடிக் கொண்டுள்ளது. "4 the People" என்ற பெயரில் வந்துள்ள இப்படத்தில் பாய்ஸ் பட ஹீரோக்களில்ஒருவரான பரத் உள்ளிட்ட 4 இளைஞர்கள் நடித்துள்ளனர்.

ஆட்டோகிராஃப் படம் தமிழில் ரிலீஸ் ஆன தினத்தில் இந்தப் படம் மலையாளத்தில் வெளியானது. இந்தப்படத்திலும் கோபிகாதான் ஹீரோயின். கதை என்ன தெரியுமா? அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளால் நான்குமாணவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

இவர்கள் ஒன்று சேர்ந்து தங்களைப் போன்ற மாணவர்களின் ஒத்துழைப்புடன் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் பட்டியலைத் தயாரித்து அவர்களைக் கடத்திச் செல்கின்றனர். தண்டனை கொடுக்கின்றனர்.

கதையை எங்கோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? கமல்ஹாசன் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இந்தியன்,விஜயகாந்த் அமைதியாக நடித்து கலக்கிய ரமணா ஆகிய படங்களின் கதைதான் இந்தக் கதையும்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பது காக்க காக்க கேமராமேன் ராஜசேகர். இசை பிரவீன்மணி. படத்தில்லஜ்ஜாவதியே என்ற பாடலில் ராஜசேகரும், பிரவீன்மணியும் கலக்கியிருக்கிறார்கள். ஓ போடு பாடலைப்போல,இந்தப் பாடல் அங்கு சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

ரமணாவின் பாதிப்பா இந்தப் படம் என்று கேட்டால் இல்லை என்றுதான் "4 the People" படத்தின் இயக்குனர்ஜெயராஜ் மறுப்பார்.

ஏனெனில் கதையை சுட்டுவிட்டு அது தமிழ் கதை இலை என்று மழுப்புவது மலையாள படவுலகில் இப்போதுவழக்கமாகிவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil