»   »  மல்லிகா ஆபாச ஆட்டம்:விசாரணை இழுத்தடிப்பு

மல்லிகா ஆபாச ஆட்டம்:விசாரணை இழுத்தடிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு தினத்தன்று இரவு நடிகை மல்லிகா ஷெராவத் ஆபாச ஆட்டம் போட்டது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூன் 29ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நடிகை மல்லிகா ஷெராவத் ஆபாச உடை அணிந்து அலங்கோல ஆட்டத்தைப் போட்டார்.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரோடா வக்கீல் சங்கத் தலைவர் நரேந்திர திவாரி, பரோடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணை அறிக்கையை வருகிற 29ம் தேதியன்று சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி திரிவேதி, அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.

நரேந்திர திவாரி தாக்கல் செய்திருந்த மனுவில், மல்லிகாவின் ஆட்டம் பெரும் கலாச்சார சீரழிவுக்கு வித்திடும். ஆபாசமாக மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தையே இழிவுபடுத்துவதாக மல்லிகாவின் ஆட்டம் இருந்தது.

எனவே அவர் மீதும் ஹோட்டல் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

கடந்த ஜனவரி 12ம் தேதி இந்த வழக்கை தொடர்ந்தார் திவாரி. இதையடுத்து இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 30 நாள் அவகாசமும் கொடுத்தது.

ஆனால் போலீஸார் விசாரணைய நடத்தாமல் தாமதப்படுத்தி வந்தனர். இதையடுத்து நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து போலீஸார் அவசரம் அவசரமாக ஒரு தனிப்படையை மும்பைக்கு அனுப்பி மல்லிகாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வருமாறு கூறினர்.

பின்னர் மல்லிகா விசாரணைக்கு வரவில்லை. மாறாக அவரது சகோதரர் வந்து மல்லிகாவின் அறிக்கை ஒன்றை போலீஸாரிடம் கொடுத்து விட்டுப் போனார். அதேபோல ஹோட்டல் மேலாளரையும் பிடித்து விசாரிக்க முடியவில்லை.

இருவரிடமும் நேரில் விசாரணை நடத்த முடியாமல் போலீஸார் வெறும் கையுடன் பரோடா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil