»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜாக்கி சானுக்கு ஜோடி மல்லிகா என்றதும் ஆட்டோகிராஃப் மல்லிகாவை நினைத்துவிடாதீர்கள். இது இந்திப்படமான மர்டர் புகழ் மல்லிகா ஷெராவத்.

பாலிவுட்டில் ஹாட்டான பெண்மணி மல்லிகா ஷெராவத் தான். ரங்கீலா வந்தபோது ஊர்மிளா மடோன்கர் மீதுஎப்படி ஒரு கிரேஸ் நிலவியதோ, அதே கிரேஸ் இப்போது மல்லிகாவு.

க்வாஷிஸ் படத்தையடுத்து மர்டர் படத்தில் மேலாடையின்றி நடித்தும், முத்தக் காட்சிகளில் தூள் பறத்தியும் இவர்ஆடிய கவர்ச்சி தாண்டவத்தில் பாலிவுட்டே ஆடிப் போயிருக்கிறது. கவர்ச்சிக் கன்னி யார் என்பதில் பிபாஷாபாசுவுக்கும், செலீனா ஜெட்லிக்கும் இடையே போட்டி நடந்து கொண்டிருந்த போது, சைலண்டாக இவர் கொடியைநாட்டி விட்டார்.

அடுத்தடுத்து படங்கள் புக் ஆனபோதுதான் ஒரு வில்லங்கம் வந்து சேர்ந்தது. 5 வருடங்களுக்கு முன்பு எனதுபடத்தில நடிக்க மல்லிகா அட்வான்ஸ் வாங்கினார். அதன்பின்பு கால்ஷீட் தராமல் என்னை இழுத்தடிக்கிறார் என்றுரமேஷ் சர்மா என்ற தயாரிப்பாளர், மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்துமல்லிகாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இப்போது ரெட் கார்ட் போட்டுள்ளது.

விஷயம் என்னவென்றால், மல்லிகா முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தது ரமேஷ் சர்மா தயாரிப்பில் உருவான கப்க்யோன் கஹான் என்ற படத்தில் தான். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1999. ரீமா பூரி என்ற பெயரில்இந்தப் படத்தில் ஒப்பந்தமான மல்லிகா, மூன்று பாடல்கள் ஷூட் செய்யப்பட்ட நிலையில் அட்வான்ஸ் பணத்தைத்திருப்பித் தராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதன்பின் ரீமா லம்பா என்ற பெயரில் ஜீனா சிர்ப் மேரே லியே படத்திலும், மல்லிகா ஷெராவத் என்றஇப்போதைய பெயரில் க்வாஷிஸ் படத்திலும் நடித்தார். இந்தப் படங்களில் நடித்தபோது ரமேஷ் சர்மாமல்லிகாவை அணுகி, கால்ஷீட் கேட்டபோது டேக்கா கொடுத்துள்ளார்.

அதன்பின்புதான் ரமேஷ் சர்மா தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகியுள்ளார். இப்போது தயாரிப்பார்கள் சங்கம்,ரமேஷ் சர்மாவின் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட வேண்டும்.அதுவரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று மல்லிகாவுக்கு தடை விதித்து விட்டது.

ஆனால் மல்லிகா துளிக் கூட கவலைப்படவில்லை. பின்னே, ஜாக்கி சானுக்கு ஜோடியாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவாய்ப்பு கிடைத்திருக்கும்போது, இந்திப் படங்களில் நடிக்க முடியாமல் போனதற்கு ஏன் கவலைப்படப் போகிறார்?

ஆமாம், தி மித் என்ற ஜாக்கி சானின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக மல்லிகா நடிக்கிறார். படத்தில்மல்லிகாவுக்கு இந்திய அரசி வேடமாம். படப்பிடிப்பு ஷாங்காய், ஹம்பி ஆகிய இடங்களில் நடக்கிறது. படத்தில்ஜாக்கி சானுடன் சேர்ந்து மல்லிகாவும் சண்டையில் தூள் பறத்தப் போகிறாராம்.

படம் வெளிவந்து வெற்றி பெற்றுவிட்டால், இந்திப் படங்களுக்கு முழுக்கு போடும் முடிவில் இருக்கிறார் மல்லிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil