»   »  திருட்டுக் கதையில் மம்முட்டி?!

திருட்டுக் கதையில் மம்முட்டி?!

Subscribe to Oneindia Tamil

மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் ஒரே கடல் படத்தின் கதை தனது கணவருடையது, அதைப் பயன்படுத்த உரிமை பெறப்படவில்லை என்று மறைந்த மலையாள எழுத்தாளர் குமரனின் மனைவி ருக்மணி குற்றம் சாட்டியுள்ளார்.

திருட்டுக் கதைகள் என்று கூறி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிக்கல் எழுவது சகஜமாகி வருகிறது. முன்பு சந்திரமுகி படத்தின் கதை குறித்து பெரும் பிரச்சினை எழுந்தது.

சமீபத்தில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் கதை குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. சிவாஜி படத்தின் கதைக்குக் கூட ஒரு உதவி இயக்குநர் உரிமை கொண்டாடி வழக்கு போட்டுள்ளார்.

இந்த நிலையில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் ஒரே கடல் படத்தின் கதை குறித்தும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஷ்யாமஇந்தப் படத்தின் கதை தனது கணவருடைய கதை என்று கூறியுள்ளார் பிரபல மலையாள எழுத்தாளர் குமரனின் மனைவி ருக்மணி. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் குமரன், மலையாளத்தில் பிரபலமான எழுத்தாளர்.

சில மாதங்களுக்கு முன்பு வங்க மொழி நாவலான ஹீராக் தீப்தி என்ற நூலை மலையாளத்தில் ஒரே கடல் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.

வங்க மொழி ஒரிஜினலில் இல்லாத சில விஷயங்களை மலையாள மொழிபெயர்ப்பில் சேர்த்திருந்தார் அவர்.

இப்போது எனது கணவர் எழுதிய ஒரே கடல் நாவலின் பெயரில் அதே கதையில் மம்முட்டியின் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்வது குறித்து என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை.

எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயரில்தான் காப்பிரைட் உரிமை உள்ளது. அவர் இறந்து விட்டதால், தானாகவே நான்தான் காப்பிரைட் உரிமையாளர். எனவே என்னிடம் கேட்காமல் கதையை பயன்படுத்திக் கொண்டது தவறு. இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகப் போகிறேன் என்று கூறியுள்ளார் ருக்மணி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil