»   »  ஆஃப் பீட் மம்முட்டி!

ஆஃப் பீட் மம்முட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளிகளின் ஹார்ட் பீட்டைத் துடிக்க வைக்கும் நடிப்பைத் தரும் மம்முட்டி ஆங்கிலத்தில் ஒரு ஆஃப் பீட் படத்தில் நடிக்கப் போகிறாராம்.

மம்முட்டிக்கு சென்னையில்தான் வீடு.ஆனாலும் பிசியான படப்பிடிப்புகள் காரணமாக எப்போதாவதுதான் சென்னை பக்கமே வருகிறாராம்.

மலையாளத்தில் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் மம்முட்டியைத் தேடி ஒரு ஹாலிவுட் படம் வந்துள்ளாம். தி லேட் நைட் பெக்கர் என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளனர்.

இது ஒரு ஆஃப் பீட் படமாகும். மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் கார்த்திகா. டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் மம்முட்டி. படப்பிடிப்பு முழுவதும் மகாபலிபுரம் அருகே நடக்கவிருக்கிறது.

மாளவிகாவுக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்துள்ளார்களாம். ரோகினியும் படத்தில் இருக்கிறார். நீத்து சந்திராவும் படத்தில் இருக்கிறார்.சித்திரம் பேசுதடி படத்தி்ன் கேமராமேன் மகேஷ் முத்துச்சாமிதான் இப்படத்திற்கும் கேமராமேன்.

மும்பையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. படத்தின் கதையைக் கேட்ட மம்முட்டி உடனடியாக ஐந்து நாள் கால்ஷீட் கொடுத்து விட்டாராம். தேவைப்பட்டால் கூடுதல் கால்ஷீட் தரவும் தயார் என்று கூறியுள்ளாராம்.

இந்தப் படத்தை 20 நாட்களில் எடுத்து முடிக்கவுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil