»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தனது காட்டல் திறமையால் தெலுங்குத் திரையுலகை கதி கலங்க வைத்த மணி சந்தனா தமிழுக்கு வருகிறார்.

ஐரோப்பாவில் எண்ட்டெயின்மெண்ட் உலகில் கொடி கட்டிப் பறக்கும் லண்டனைச் சேர்ந்த சுபா சந்தீப் முதன்முதலமாக தமிழில் எனக்கே எனக்கா என்றொரு படத்தைத் தயாரிக்கிறார். பல மொழிப் படங்களைத்தயாரித்துள்ள அவரது ஸ்பைஸ் டீம் நிறுவனத்தின் முதல் தமிழ் முயற்சி இது.

இதில் ஹீரோயினாக இறக்கிவிடப்பட்டுள்ளார் மணி சந்தனா. கூடவே மும்பையைச் சேர்ந்த ஆனந்தியும்என்பவரும் அறிமுகமாகிறார். இருக்கிறார். ஹீரோ புதுமுகம் அர்மான். இவரைப் பார்த்தால் மும்பைக்காரர் போலத்தெரிந்தாலும் சொந்த ஊர் ராணிப்பேட்டை தானாம்.

லண்டன், ஹைதாராாத், சென்னை என பல இடங்களில் சூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. சத்யராஜை வைத்துஅடிதடி படத்தை இயக்கிய ஷிவ்ராஜ் தான் இந்தப் படத்தை டைரக்ட் செய்கிறார்.

இந்தப் படத்தில் இசையமைப்பாளராக சரண் என்பவர் அறிமுகமாகிறார்.

தமிழில் முதல் படம் என்பதால் புதுமுகங்களாக இருந்தாலும் பிரமாண்டமான செலவில் படத்தை எடுத்து வருகிறதுஸ்பைஸ் டீம் நிறுவனம்.

ட்ரை ஆங்கிள் லவ், காமெடியுடன் இன்றைய இளவட்டங்களை தியேட்டருக்கு இழுக்க ஆனந்தி, மணிசந்தனாவின் கவர்ச்சியையும் அளவுக்கு அதிகமாகவே கலந்து உருவாகியிருக்கிறது இந்தப் படம்.

அப்பா, அம்மா சொல்லும் நபர் பிடிக்காததால் வேண்டுமென்றே ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்யும்கேரக்டராம் மணி சந்தனாவுக்கு. ஹீரோவை வளைக்க அவர் தொடுக்கும் மன்மத அம்புகள் படம்பார்ப்பவர்களையும் சேர்த்தே தைக்குமாம்.

அவருக்குப் போட்டியாய் இன்னொரு கதாநாயகியான ஆனந்தியும் தனது மஸ்து... மஸ்து திறமையைக்காட்டியிருக்கிறார்.

தெலுங்கில் தனது கவர்ச்சியால் படம் பார்ப்பவர்களைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மணிசந்தனாவுக்குசொந்த ஊர் பெங்களூர். இவருக்கு குச்சிப்புடி நடனம் எல்லாம் தெரியுமாம். இந்தப் படத்தில் அடக்க, ஒடுக்கமாய்சேலை உடுத்தி ஆடும் வகையில் ஒரு குச்சிப்புடி டான்ஸ் வைக்கச் சொன்னாராம்.

அதை வேற படத்துல போய் ஆடிக்குங்க என்று சொல்லிவிட்ட இயக்குனர் ஷிவ்ராஜ், மணிசந்தனாவின்திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் காஸ்ட்யூம்களைத் தந்து, டங்கானக்கடி டான்ஸ்களையே வைத்தாராம்.ம.சந்தனாவும் நிலவரத்தைப் புரிந்து கொண்டு நன்றாகவே ஒத்துழைப்பு காட்டி ஆடிக் கலக்கியிருக்கிறார்.

தமிழில் ஒரு இடத்தைப் பிடித்துவிடுவதில் தீவிரமாகவே இருக்கிறாராம் மணிசந்தனா.

இந்தப் படத்தை முடித்துவிட்டு பிரஷாந்தை வைத்து லண்டன் என்ற படத்தையும் தயாரிக்க இருக்கிறார் சுபா சந்தீப்.இப் படத்தில் பிரசாந்த்துக்கு ஜோடியாக தெலுங்கைச் சேர்ந்த அங்கிதா நடிக்கிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil