»   »  மணிவண்ணன் மகனின் ஆலங்குடி

மணிவண்ணன் மகனின் ஆலங்குடி

Subscribe to Oneindia Tamil
Raguvannan
நடிகராக அறிமுகமாகி இடையில் காணாமல் போன மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் ஆலங்குடி என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சிவக்குமார் மகன் சூர்யா, சத்யராஜ் மகன் சிபிராஜ், இயக்குனர்கள் கஸ்தூரிராஜா மகன் சிபிராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் என நடிகர்கள், இயக்குநர்களின் வாரிசுகள் கலக்கும் காலம் இது.

அந்த வரிசையில் கொஞ்ச காலத்திற்கு முன்பு ரகுவண்ணனும் இணைந்தார். சத்யராஜ் நடித்த படத்தில் 2வது நாயகனாக நடித்திருந்தார் ரகுவண்ணன். இந்த நிலையில் தனி ஹீரோவாக அவர் நடிக்கவுள்ளார்.

பாண்டியராஜனிடம் உதவியாளராக பணிபுரிந்த நாகேந்திரா என்பவரின் இயக்கத்தில், ஸ்ரீநரமுக விநாயகர் மூவிஸ் தயாரிப்பில் ஆலங்குடி என்ற படத்தில் ரகுவண்ணன் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக புதுமுகங்கள் தீபிகா, நதியா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசை அமைக்கிறார்.

ஆலங்குடியிலிருந்து சென்னையில் உள்ள பிரபலக் கல்லூரியில் படிக்கவரும் ஓர் பிரமாண இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தின் கரு அமைந்துள்ளது.

அமைதியும், அதிரடியும் கலந்த கலவையாக ஆலங்குடி இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். ஊட்டி, காஷ்மீர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்படத்தில் கானா உலகநாதன் ஒரு பாடலுக்கு பாடி நடிக்கிறார்.

ஆலங்குடி, ரகுவுக்கு வெற்றிக் கொடியாகட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil