»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளி ரேஸில் மன்மதன்தான் முந்திக் கொண்டு ஒடுகிறது.

ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஏராளமாக அணிவகுக்கும். ஆனால் இந்த தீபாவளிக்குரஜினி, கமல், விஜய், விக்ரம் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

மாறாக, விஜயகாந்த்தின் நெறஞ்ச மனசு, சரத்குமாரின் சத்ரபதி, அஜீத்தின் அட்டகாசம், சுள்ளான் நடிகர்களான சிம்புவின்மன்மதன், தனுஷின் ட்ரீம்ஸ் ஆகியவை மட்டுமே வெளியாகின.

முதலில் தீபாவளிக்கு 11 படங்கள் ரிலீஸாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் மகாநடிகன், ஜனனம், காதலே எங்கள் தேசிய கீதம்,மீசை மாதவன், கிரிவலம், சதுரங்கம் ஆகிய படங்கள் ஜகா வாங்கிக் கொண்டதால், போட்டி 5 படங்களுக்குள் முடிந்தது.

இந்த 5 படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை மன்மதனும், அட்டகாசமும்தான். எதிர்பார்ப்பை இரு படங்களைநிறைவேற்றத் தவறவில்லை.

மிகுந்த செக்ஸியாக படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் என்று கூறப்பட்டாலும் திரைக்கதை அமைப்பில் சிம்புஜெயித்துவிட்டார் என்றே கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

முருகன் என்பவரை சும்மாக்காச்சும் டைரக்டராகப் போட்டுவிட்டு, சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய படம் மன்மதன்.படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பாடல்கள் ஹிட்டாகி ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.

நல்ல திரைக்கதை, கிளாமரான மும்பை நடிகைகள், சிம்புவின் வித்தியாசமான பாத்திரப்படைப்பு ஆகியவையும் சேர்ந்து கொள்ளபடம் இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹிட். ஆரம்பத்தில் ஏ சென்டர்களில் மட்டும் வசூலை வாரிக் குவித்த படம், இப்போது பி மற்றும்சியில் கலக்குகிறது.

அடுத்த இடத்தில் அட்டகாசம்:

மன்மதனுக்கு அடுத்தபடியாக அட்டகாசம் படம் நல்லபடியாக ஓடுகிறது. அஜீத்-சரண்-பரத்வாஜ் கூட்டணி இந்தப் படத்திலும்வெற்றி பெற்றிருக்கிறது. ஆக்ஷன், காமெடி இரண்டிலும் அஜீத் தூள் கிளப்பியிருக்கிறார். பாடல்கள் ஹிட் என்பது படத்திற்குகூடுதல் பலம்.

நீண்ட நாட்களாக ஹிட் படம் எதையும் கொடுக்காமல் இருந்து வந்த அஜீத், இந்தப் படத்தைத்தான் பெரிதும் நம்பி வந்தார். சரண்தனது மார்க்கெட் தூக்கி நிறுத்துவார் என்று சொந்தக் காசை போட்டு படத்தை ரிலீஸ் செய்தார். அதற்கு இப்போது பலன்கிடைத்துள்ளது.

ஏ, பி, சி என மூன்று சென்டர் ரசிகர்களையும் அட்டகாசமாக திருப்திபடுத்தியுள்ளது அட்டகாசம் படம்.

சுமார் சத்ரபதி:

அடுத்து சரத்குமாரின் சத்ரபதி படம். ஆர்.பி.செளத்ரியின் பேனர் என்றாலே லோ பட்ஜெட் படம்தான். சத்ரபதியும் அந்தவகைதான். இரண்டாவது பாதியில் திரைக்கதையில் இயக்குநர் மகேஷ் காட்டியிருக்கும் வேகம் படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாகஅமைந்துவிட்டது.

காட்சியமைப்புகள் ரமணாவை நினைவுபடுத்துகிறது என்றாலும் சரத்குமாரின் ரசிகர்களுக்குத் தேவையான ஆக்ஷன் படத்தில்நிறையவே இருக்கிறது. படம் மூன்று சென்டர்களிலும் சுமாராகப் போகிறது.

செளத்ரி போட்டிருந்த எஸ்டிமேட்டை விட குறைவான செலவில் மகேஷ் படமெடுத்து தந்துவிட்டதால், சூப்பர்குட்ஸ் பிலிம்ஸின்அடுத்த படத்தையும் மகேஷ்தான் இயக்குகிறார்.

திணறும் நெறஞ்ச மனசு:

விஜயகாந்த் வில்லேஜ் சப்ஜெக்டில் நடித்தால் படம் நல்லா போகும் என்பது கோலிவுட்டில் ஒரு நம்பிக்கை. அப்படித்தான்நெறஞ்ச மனசு மீது விநியோகஸ்தர்கள் நிறைய பணம் கட்டினார்கள். ஆனால் இந்தக் குதிரை எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

கிராமத்துச் சூழல் படத்தில் அருமையாக வந்திருந்தாலும் திரைக்கதையில் அவ்வளவு பலம் இல்லை. படத்தில் காமெடிகொடுமை. விஜயகாந்த் வேறு அடிக்கடி குளோசப் காட்சிகளில் வந்து பயமுறுத்துகிறார்.

பி மற்றும் சி சென்டரில் மட்டுமே படம் சுமாராக ஓடுவதாக செய்தி வந்துள்ளது.

நொண்டியடிக்கும் ட்ரீம்ஸ்:

இந்த தீபாவளி ரேஸில் நொண்டிக் குதிரை என்றால் அது ட்ரீம்ஸ்தான். ஹாட்ரிக் வெற்றியைச் சுவைத்த தனுஷ், இந்தப் படத்தின்மூலம் ஹாட்ரிக் தோல்வியை சந்திக்கிறார். படத்தில் ப்ளஸ் பாயிண்ட்களை விட மைனஸ் பாயிண்ட்களே அதிகம்.

மூன்று சென்டர்களிலும் வசூல் படுகுறைச்சல். வெகு சீக்கிரம் இந்தியத் தொலைக்காட்சிகள் ஏதாவது ஒன்றில் முதன்முறையாக வரவாய்ப்பிருக்கிறது.

திருட்டி விசிடி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதால், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் மன்மதன், அட்டகாசம்தவிர்த்து மற்ற படங்கள் தரமாக இல்லாததால் அவற்றிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

நல்ல கதையுடன் வந்தால் மட்டுமே அந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள், மற்றபடி திருட்டு விசிடி, படப்பிடிப்புக்கட்டணம் உயர்வு என்று டப்பிக் காரணங்களைக் கூறிக் கொண்டிருந்தால் திரையுலகம் தேறவே முடியாது என்பதுதான் ரசிகர்கள்திரையுலகுக்குக் கொடுக்கும் தீபாவளி மெசேஜ்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil