»   »  மீண்டும் காதலிக்க நேரமில்லை

மீண்டும் காதலிக்க நேரமில்லை

Subscribe to Oneindia Tamil

நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு மனோபாலா படம் இயக்க வருகிறார்.

ரஜினியை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கியவர் மனோபாலா. பல நல்ல படங்களைக் கொடுத்தவர். பின்னர் நடிப்பில் புகுந்து காமெடியில் கலக்கி வந்தார்.

பாரதிராஜாவின் சிஷ்யப் பிள்ளைகளில் ஒருவர்தான் மனோ பாலா. 80களின் இறுதியில் அவரது இயக்கத்தில் வெளிவந்த சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், பிள்ளை நிலா ஆகியவை மனோபாலாவின் சில குறிப்பிடத்தக்க ஹிட் படங்கள்.

அதன் பின்னர் நடிப்பில் குதித்தார் மனோபாலா. காமெடியில் கலக்கி வந்த மனோபாலா, இடையில் அதிமுகவில் இணைந்து சட்டசபைத் தேர்தலில் தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். இப்போது மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி வருகிறார்.

இந்த முறை அவர் எடுத்துள்ள சப்ஜெட்க் ரீமேக். காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில் உள்ளார் மனோபாலா. இதுகுறித்து மனோபாலா கூறுகையில், அடிப்படையில் நான் இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞன். அதை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்.

விருப்பப்பட்டுத்தான் நான் நடித்தேன், நடிக்கிறேன். எனக்குக் கொடுக்கப்படும் கேரக்டர்கள் கொடுத்து நான் கவலைப்படுவதே இல்லை. எந்த ரோலானாலும் நடிப்பேன், அதற்குத் தயங்கவே மாட்டேன். காரணம், எனக்கென்று எந்த இமேஜும் கிடையாது.

இப்போது ஒரு படத்தை இயக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டுள்ளேன். இது முழு நீள காமெடிப் படமாக இருக்கும், ஒரு ரீமேக் படமாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையா நான் வாங்கியிருந்தேன். அதைக் கொண்டு மீண்டும் டைரக்ஷனுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளேன் என்றார்.

காதலிக்க நேரமில்லையின் ரீமேக் படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகளை மிகவும் கவனமாக தேந்தெடுத்து வருகிறாராம் மனோபாலா. சீக்கிரமே முறைப்படி அறிவிப்பையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil