»   »  'அரவாணி' ஆகும் ஆச்சி!

'அரவாணி' ஆகும் ஆச்சி!

Subscribe to Oneindia Tamil
Manorama
ஆச்சி மனோரமாவின் நீண்ட நாளைய ஆசை ஒரு வழியாக நிறைவேறப் போகிறது. புதிய படம் ஒன்றில் ஆச்சி, அரவாணி வேடத்தில் நடிக்கப் போகிறார்.

கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா, நடிக்காத வேடங்களே இல்லை. அத்தனை வேடங்களிலும் நடித்துக் கலக்கியுள்ள மனோரமா மனதில், அரவாணி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அது கை கூடாமல் இருந்து வந்தது.

இப்போதுதான் அது நிறைவேற காலம் கனிந்துள்ளது. ஜான் என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் அரவாணி வேடத்தில் நடிக்கிறார் மனோரமா.

சோலைக்குயில், மலைச்சாரல், காதலே நிம்மதி ஆகிய படங்களை இயக்கிய இந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

நீலகிரி மலைப் பகுதியில் வாழும் படுகர் இனத்தவரின் வாழ்க்கைச் சூழலில், உருவாகும் படம் ஜான். ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தபோது படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.

மேலும் ஆச்சி மனோரமாவையும் அவர்கள் நடனமாடி வரவேற்றனர். உற்சாகத்தில் ஆச்சியும் அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆட்டத்தைப் போட்டு அசத்தினார்.

படத்தின் நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் ஆவர். ஆச்சியிடம் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி கதையையும் சொன்னபோது முழு திருப்தி அடைந்தாராம். மேலும், அரவாணி கேரக்டர் குறித்து கூறியதுமே திருப்தி அடைந்து நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

ஆச்சிக்கு, இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறார் இந்திரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil