»   »  பள்ளத்தூர் பாப்பாவாக இருந்து மனோரமா ஆன கின்னஸ் நாயகி கோபிசாந்தா

பள்ளத்தூர் பாப்பாவாக இருந்து மனோரமா ஆன கின்னஸ் நாயகி கோபிசாந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஆச்சி மனோரமாவின் நடிப்புத் திறமை பற்றி பேச நாள் ஒன்று போதாது.

1958ம் ஆண்டு வெளியான மாலையிட்ட மங்கை படம் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் மனோரமா. 5 மொழிகளில் ஆயிரத்து 500 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் அவர். ஆணாதிக்கம் மிகுந்த திரையுலகில் காமெடியில் கலக்கி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் ஆச்சி.

நகைச்சுவை நடிகையாக இருந்தாலும் தனது நடிப்பால் ஹீரோ, ஹீரோயின்களுக்கே சவாலாக இருந்தவர்.

தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரின் நடிப்பை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனே மிரண்டுவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்

விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மா என்ற வேலைக்காரப் பெண்ணாக நடித்திருந்தார் இல்லை வாழ்ந்திருந்தார் மனோரமா. அந்த படத்தில் அவர் மெட்ராஸ் பாஷையில் பேசி அசத்தியிருப்பார். கம்முன்னு கெட என்ற அவரின் வசனம் ரசிகர்களை கவர்ந்தது.

பாட்டி சொல்லைத் தட்டாதே

பாட்டி சொல்லைத் தட்டாதே

பாண்டியராஜன் பாட்டியாக மனோரமா நடித்த படம் பாட்டி சொல்லைத் தட்டாதே. அந்த படத்தில் அவர் பாடிய டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே பாடல் மிகவும் பிரபலம் ஆனது.

நடிகன்

நடிகன்

செவ்வாய் தோஷத்தால் திருமணமாகாத பெண்ணாக மனோரமா நடித்த படம் நடிகன். அதில் வயதானவர் வேடத்தில் இருந்த சத்யராஜ் மீது அவர் காதல் கொள்வது ரசிக்கும் வகையில் இருந்தது.

சின்ன கவுண்டர்

சின்ன கவுண்டர்

சின்ன கவுண்டர் படத்தில் மனோரமா விஜயகாந்தின் அம்மாவாக நடித்திருந்தார். படத்தில் காமெடியில் கலக்கியதுடன் நல்ல அம்மாவாக, மாமியாராக நடித்து பாராட்டு பெற்றார்.

சின்ன தம்பி

சின்ன தம்பி

சின்ன தம்பி படத்தில் உலகம் தெரியாத மகனான பிரபுவின் தாயாக நடித்திருந்தார் மனோரமா. படத்தில் ராதாரவி விதவையான மனோரமாவின் மீது வண்ண நீரை ஊற்றிய காட்சியை பார்த்து ரசிகர்கள் கொதிப்படைந்தனர்.

வீரத் தாலாட்டு

வீரத் தாலாட்டு

வீரத் தாலாட்டு படத்தில் பேத்தி ரோஜாவுடன் சேர்ந்து கொண்டு சிவாஜி கணேசனுக்கு இல்லாத தொல்லைகள் கொடுப்பார் மனோரமா. அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கும்.

முடியாது

முடியாது

மனோரமா நடிப்பு பற்றி நம்மால் ஒரு நாளில் பேசி முடிக்க முடியாது. அவர் நடிப்பால் கலக்கிய படங்கள் பல உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Manorama achi acted in so many movies that we couldn't discuss about all of them in one day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil