»   »  சிவாஜியை ரசித்த மொரீஷியஸ் அதிபர்

சிவாஜியை ரசித்த மொரீஷியஸ் அதிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னைக்கு வந்துள்ள மொரீஷியஸ் அதிபர் அனீருத் ஜெகன்னாத் சிவாஜி படத்தைப் பார்த்து ரசித்தார்.

மொரீஷியஸ் அதிபர் ஜெகன்னாத் தனது குடும்பத்துடன் தமிழகத்திற்கு வந்துள்ளார். கோவையில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் கொடைக்கானல் சென்று ஒரு வாரம் தங்கி ஓய்வெடுத்தார்.

கொடைக்கானல் ஓய்வை முடித்துக் கொண்டு சென்னைக்கு தனது மனைவி சரோஜினி மற்றும் இரு மகள்களுடன் வந்தார் ஜெகன்னாத். வந்தவர் சிவாஜி படம் குறித்துக் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து படத்தைப் பார்க்க பிரியப்பட்டுள்ளார்.

அதைக் கேள்விப்பட்ட அபிராமி மெகாமால் அதிபர் ராமநாதன், தனது திரையரங்க வளாகத்திலேயே சிவாஜியைப் பார்க்க ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து ஜெகன்னாத் தனது மனைவி, மகள்களுடன் அங்கு வந்தார். அவரை ராமநாதனும், அவரது மனைவியும், அபிராமி மெகாமால் இயக்குநருமான நல்லம்மை ராமநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மொரீஷியஸ் அதிபரின் குடும்பம் சிவாஜியை ரசித்துப் பார்த்தது. பின்னர் படம் குறித்து ஜெகன்னாத் கூறுகையில், ரஜினிகாந்த்தின் ஸ்டைல்கள் என்னைக் கவர்ந்து விட்டன. படம் முழுவதையும் அனுபவித்து ரசித்தோம்.

உண்மையிலேயே ரஜினிகாந்த் ஒரு உலக சூப்பர் ஸ்டார். அவரது ஸ்டைல் மற்றும் வசன உச்சரிப்பு அத்தனை பேரையும் நிச்சயம் கவர்ந்திழுப்பதாக உள்ளது. சிவாஜி படம் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது என்றாராம் ஜெகன்னாத்.

Please Wait while comments are loading...