»   »  சிவாஜியுடன் Vs

சிவாஜியுடன் Vs

Subscribe to Oneindia Tamil

சேரன் தனது மாயக்கண்ணாடி படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதிக்கு முன்பு திரைக்கு வரவுள்ளது. 12ம் தேதியே படம் திரைக்கு வருகிறது.

சிவாஜியுடன் மோதலில் குதிக்க பலரும் தயங்கிக் கொண்டுள்ள நிலையில் சில படங்கள் தைரியமாக களம் காணவுள்ளன. அந்த வரிசையில், மாயக்கண்ணாடி லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது.

பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மாயக்கண்ணாடியின் பாடல்கள், ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன. தற்போது படத்துக்கு இறுதிக் கட்ட அழகு சேர்க்கும் வேலையில் சேரன் பிசியாக உள்ளார்.

ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று படம் திரைக்கு வருவதாக அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தனது அடுத்த படம் குறித்த வேலைகளில் மும்முரமாகி விட்டார் சேரன். சிவப்பதிகாரம் கொடுத்த கரு. பழனியப்பனின் படத்தில் சேரன் நாயகனாக நடிக்கிறார்.

பிரிவோம் சந்திப்போம் என்று இப்படத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர். களையான கமலினி முகர்ஜிதான் இதில் நாயகியாக நடிக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்துக்குப் பிறகு பிரேக் இல்லாமல் கிடந்த கமலினிக்கு சேரனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தபோது உடனே ஓ.கே சொல்லி விட்டாராம்.

இந்தப் படத்தின் போட்டோ செஷனுக்காக பல இடங்களையும் அலசியுள்ளனர். கடைசியில் ராயபுரத்தில் உள்ள பழைய கால ரயில் நிலையப் பின்னணியில் வைத்து போட்டோக்களை எடுத்து முடித்தனராம்.

போட்டோ பிடித்த பிறகு கருவை ஓரம் கட்டி கதை கேட்டோம். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் கதையா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

ரொம்ப வித்தியாசமாக இந்தப் படத்தைக் கொடுக்கப் போகிறோம். வித்யாசாகர் இசை அமைக்கிறார். சில பாடல்கள் ரெடியாக விட்டன.

மார்ச் 28ம் தேதி ஏவி.எம். பிள்ளையார் கோவில் பூஜையைப் போட்டு படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம் என்றார் கரு.

கரு உருவாகி விட்டது, சுகப் பிரசவமாக அமையட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil