»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிமிக்ரி மயில்சாமி ரொம்பவும் சந்தோஷமாக உள்ளார். சன் டிவியில் நிகழ்ச்சி கொடுக்க ஆரம்பித்த நேரம்,இப்போது அவரது கை நிறைய படங்கள் உள்ளதாம்.

சென்னையிலிருந்து மதுரைக்கு பஸ்களில் பயணம் செய்பவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சாலையோரஹோட்டல்களில் வாரியாரும் ரஜினிகாந்த்தும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்காமல் இருக்க முடியாது.

வாரியாராகவும் ரஜினியாகவும் சுருளி ராஜனாகவும் மாறி மாறிப் பேசி பயணிகளுக்கு கலகலப்பூட்டிய அந்தக்குரல் மயில்சாமிக்குச் சொந்தமானதாகும்.

மிமிக்ரியில் புகழ் பெற்ற அளவுக்கு சினிமாவில் பெயர் எடுக்க முடியவில்லை மயில்சாமியால். அவ்வப்போதுசின்னச்சின்ன வேடங்களில் மட்டுமே தலை காட்டி வந்தார்.

இந்த நிலையில்தான் வந்தது சன் டிவி வாய்ப்பு. "காமெடி டைம்" என்ற அந்த நிகழ்ச்சிக்கு இப்போது நல்லவரவேற்பாம். நேயர்களை சன் டிவிக்குக் கடிதம் போடச் சொல்லி அவர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டுக்கூப்பிட்டுப் பேசுகிறார் மயில்சாமி.

5 வயது ஆராவமுது முதல் 80 வயது எசக்கிப் பாட்டி வரை மயில்சாமியுடன் கொஞ்சிக் குலாவிப் பேசிமகிழ்கின்றனர்.

வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு "காமெடி டைம்" நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுநிம்மதியாகவும் சந்தோஷமாகவும் தூங்கச் செல்வதாகக் கூறும் மக்கள், இதற்காக மயில்சாமியை வாயாரவாழ்த்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி மயில்சாமிக்குப் புது வாழ்க்கையைக் கொடுத்துள்ளது.

மேலும் "காமெடி டைம்" வந்த நேரம் பார்த்து வெளியான "வருஷமெல்லாம் வசந்தம்" படத்தில் மயில்சாமியின் காமெடி நன்றாக பேசப்பட்டது. தொலைபேசியில் வரும் பல நேயர்கள் "மயில்சாமி சார்,இந்தப் படத்தில் தூள் கிளப்பிட்டீங்க"ன்னு பாராட்டவும் தவறுவதில்லை.

இதையடுத்து அவருக்கு மளமளவென்று பட வாய்ப்புக்கள் குவியத் தொடங்கி விட்டன.

தனது இத்தனை ஆண்டுக் கால வாழ்க்கையில் (சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார்) கைநிறையப் படங்கள் இருப்பது இதுவே முதல் தடவை என்று கண்களில் நீர் பணிக்க குறிப்பிடுகிறார் மயில்சாமி.

சன் டிவிக்கும், என்னையும் ரசிக்கும் ரசிகர்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்றுசந்தோஷத்தில் திக்கு முக்காடிக் கொண்டே சொல்கிறார் மயில்சாமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil