»   »  மீனாவுடன் திருமணமா?-கன்னட நடிகர் மறுப்பு

மீனாவுடன் திருமணமா?-கன்னட நடிகர் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீனாவுக்கும் கன்னட நடிகர் சுதீப்புக்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக பரபரப்பு தகவல் கிளம்பியுள்ளது. ஆனால், அதை சுதீப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சுதீப் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதீப்பும், மீனாவும் இரண்டு கன்னட படங்களில் இணைந்து நடித்ததனர். அதில் ஒன்று கமல்ஹாசனின் ஹிட் படமான சிப்பிக்குள் முத்து.

தமிழில் ஹிட் படங்களை ரீ-மேக் செய்து நடித்து வரும் கன்னட நடிகர்களில் முக்கியமானவர் சுதீப்.

இரண்டு படங்களில் மீனாவுடன் ஜோடி சேர்ந்தார். இரண்டுமே ஹிட். இதனால் இது ராசியான ஜோடி என கொண்டாடப்படுகிறது.

இந் நிலையில் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் கிளம்பின. அதை இருவரும் கண்டுகொள்ளவில்லை.

இந் நிலையில் இருவருக்குமே கல்யாணமாகிவிட்டதாக கதை கிளம்பியுள்ளது.

ஆனால், இதை கோபத்துடன் மறுத்துள்ளார் சுதீப்.

அவர் கூறுகையில், மீனாவை நான் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக உள்ளது. என் வளர்ச்சியின் மீது பொறாமைப்பட்டு யாரோ புரளி கிளப்பி விட்டிருக்கின்றனர்.

எனக்கு திருமணமாகி மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

அப்படியிருக்கும்போது நான் மீனாவை திருமணம் செய்துகொண்டதாக வந்த செய்தி அபத்தம்.

மீனா திருமணமாக வேண்டியவர், இப்படியான செய்திகள் அவரின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil