»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் மீனாவின் வீட்டுக்கு சென்றார் ஒரு தயாரிப்பாளர். போனபோது சந்தோஷமாக போன அவர் திரும்பிய போது, பேயறைந்தது போல வந்தார்.

ஓவர் டூ பேக்கிரவுண்ட் ஸ்டோரி...

மீனாவை தனது புதிய படத்தில் புக் செய்யவே சென்றுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். இளம் நாயகன் ஒருவர் ஹீரோவாகநடிப்பதாக தயாரிப்பாளர் கூறவே மீனாவும் அவரது தாயாரும் ஜூஸ் எல்லாம் கொடுத்து அவரை உபசரித்து மிக மகிழ்ச்சியாகப்பேசிக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து பேசிய அந்தத் தயாரிப்பாளர், படத்தில் அந்த ஹீரோவுக்கு அக்காவாக மீனா நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவ்வளவுதான், ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று விட்டாராம் மீனா. அவரும் அவரது தாயாரும் தாம் தூமென குதித்ததயாரிப்பாளரை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்களாம்.

தப்பித்தோம்,பிழைத்தோம் என்று ஒடி வந்துள்ளார் தயாரிப்பாளர்.

இன்னும் மீனாவுக்கு சின்ன பாப்பா என்று நினைப்பு இருப்பதாக புலம்பி வரும் அந்தத் தயாரிப்பாளர் அந்த கேரக்டருக்குஇப்போது இன்னொரு முன்னாள் "பாப்பாவை" புக் செய்து விட்டாராம்.

Please Wait while comments are loading...