»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் மீனாவுக்கு கசமுசாவேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நியூ படத்தின் வெற்றிக்குப் பின் அடுத்த படத்தில் மும்முரமாகஇருக்கிறார். முதலில் பி.எப். (பெஸ்ட் பிரெண்ட்) என்று பெயர்வைத்தவர், பின்பு எதற்குப் பிரச்சினை என்று பெயரை மாற்றிவிட்டார்.

இப்போது படத்தின் பெயர் அன்புள்ள நண்பனே. படத்தின்ஸ்கிரிப்ட் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்தில் மீனாவை ஒரு சூப்பர் வேடத்தில் நடிக்கவைக்க வேண்டும் என்று விரும்பிய சூர்யா, படங்கள் அதிகம்இல்லாம் வீட்டில் கிடக்கும் மீனாவை அணுகியுள்ளார். வேடம்குறித்து விவாதித்தார். அதைக் கேட்க கேட்கசந்தோஷமடைந்த மீனா உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டார்.

நியூ படத்தில் கிரண் நடித்தது போன்ற வேடமாம் இது.இருந்தாலும், இப்போது தமிழில் மார்க்கெட் இல்லாதநிலையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த இந்த கிக் வேடம் கைகொடுக்கும் என்பதால் உடனடியாக ஓ.கே சொல்லி விட்டார்மீனா.

தற்போது கருணாநிதியின் கதை, வசனத்தில் தயாராகும்கண்ணம்மா படத்தில் நடித்து வருகிறார் மீனா. அதில்அவ்வளவாக மீனாவுக்கு வேலையில்லை. இந் நிலையில்சூர்யா வந்து அழைக்க, கிளாமரசாக நடிக்க அழைக்க உடனேஒப்புக் கொண்டுவிட்டார்

.சூர்யா கூப்பிட்ட ராசியோ என்னவோ, மானிடன் என்றஇன்னொரு படத்திலும் நடிக்க மீனாவைத் தேடி வாய்ப்புவந்துள்ளது.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், நிறம் மாறாத பூக்கள், சலங்கை ஒலி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகபணியாற்றி நிவாஸ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே செவ்வந்தி, ராஜா ராஜாதான், எனக்காக காத்திரு ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உடையவர். தற்போதுமானிடன் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆகிறார். படத்திற்கு ஒளிப்பதிவும் இவரே.

என் மனவானில் படத்தின் நாயகன் ஜெயசூர்யாதான் இந்தப் படத்தில் ஹீரோ. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஒரு சிறியவேடத்தில் நடித்த இவர், அதன்பின்பு தமிழில் வாய்ப்புகள் ஏதும் வராததால் மலையாளத்திற்கே போய்விட்டார்.

இப்போது மானிடன் படத்திற்காக மீண்டும் சென்னை வந்துள்ளார். காதல், காமம் இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டுதவிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதையாம் இது. கொஞ்சம் வில்லங்கமாகத்தான் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil