»   »  கருப்பசாமியில் பிடித்த..மீனாட்சி

கருப்பசாமியில் பிடித்த..மீனாட்சி

Subscribe to Oneindia Tamil

முதல் படமே சூப்பர் ஹிட் ஆகி விட்டதால், கருப்பசாமி.. நாயகி மீனாட்சி படு சந்தோஷமாக இருக்கிறார்.

கொல்கத்தாவிலிருந்து கிளம்பி வந்துள்ள ரோஜா குல்கந்துதான் மீனாட்சி. படு அழகாக இருக்கும் மீனாட்சிக்கு தான் நடித்த முதல் தமிழ்ப் படமே ஹிட் ஆகி விட்டதால் படா சந்தோஷமாக இருக்கிறதாம்.

தமிழில் சுத்தமாக ஒரு வார்த்தை கூட தெரியாத நிலையிலும் தான் நடித்த முதல் படம் வெற்றிப் படமாகி விட்டதால் சீக்கிரமே தமிழ் கற்றுக் கொண்டு இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறாராம்.

மீனாட்சியின் நிஜப் பெயர் பிங்கி சர்க்கார். லோக்கல் டிராமா ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தவரை, கூட நடித்தவர்கள் தமிழ் பக்கம் டிரை செய்து பார்த்தால் சூப்பர் சக்ஸஸ் ஆவாய் என்று கிளறி விட கிளம்பி கோலிவுட்டுக்கு வந்து விட்டாராம்.

நடிக்க ஆர்வமாக இருந்தபோது முதலில் வந்த வாய்ப்பு கொக்கியாம். கரண் நடித்த கொக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாட்சியை அணுகினர். ஆனால் அந்த சமயம் பார்த்து ஒரு இந்திப் படம் புக் ஆகி விட்டதால் கொக்கியில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம் மீனாட்சிக்கு.

இதனால் விசனமாக இருந்தவரை தேற்றிய கரண், அடுத்த படத்தில் நிச்சயம் சந்திப்போம் என்று ஆறுதல் கூறியிருந்தாராம். சொன்னபடியே இப்போது கருப்பசாமியில் நடிக்க வைத்து மீனாட்சிக்கு சந்தோஷம் கொடுத்துள்ளார்.

மீனாட்சிக்கு கிளாமர் செய்வதில் வருத்தமே கிடையாதாம். கிளாமராக நடிக்க ஆபர் வந்தால் சந்தோஷமாக செய்வாராம். இயக்குநர் சொல்வதைத் தட்டாமல் கேட்பவரே உண்மையான கலைஞர் என்றும் அதற்கு விளக்கம் சொல்கிறார் மீனாட்சி.

மீனாட்சி ரொம்ப சமர்த்துப் பொண்ணாம். அதாவது ஆடம்பரமாக இருப்பது, பகட்டு செய்வது, பந்தா காட்டுவது என எதுவுமே தெரியாதாம். சாலையோர தாபா கடையில் உட்கார்ந்து சாப்பிடக் கூப்பிட்டால் கூட உடனே வந்து விடுவாராம்.

ஆனாலும் மீனாச்சிக்கு ரொம்பத்தான் அடக்கம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil