»   »  தங்கச்சி மீரா

தங்கச்சி மீரா

Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஒரு பாசமலர் உருவாகிறது. இங்கல்ல, தெலுங்கில்.

பாசமலர் கதையை அப்படி சுட்டு, இப்படிச் சுட்டு, வறுத்து, பொறித்து பல ரூபங்களில் பல படங்கள் வந்து விட்டன. இப்து தெலுங்கிலும் ஒரு பாச மலரைக் கோர்த்து ரசிகர்களின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீரை உருவ திட்டமிட்டுள்ளனர்.

டாக்டர் ராஜசேகர் நடிக்கவுள்ள இப்படத்துக்கு ரக்த சம்பந்தம் என்று பெயர் வைத்துள்ளனர். மீரா ஜாஸ்மின்தான் தங்கச்சியாக நடிக்கிறார். தங்கச்சி வேடமாக இருந்தாலும், மீராவுக்கும் ஜில்லான ஒரு டான்ஸை கண்டிப்பாக வைப்பார்கள் என நம்பலாம்.

டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாக சார்மி நடிக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. பிரதாப் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

திருமகனில் நன்கு நடித்திருந்தும் பெரிதாக பேசப்படவில்லை. அடுத்து வந்த பரட்டை என்கிற அழகுசுந்தரமும் கவிழ்த்து விட்டு விட்டது. இதனால் அடுத்த தமிழ்ப்படத்தில் நடிப்பதற்கு முன்பு நல்ல கதையாக வர வேண்டும் என்று காத்திருக்கிறாராம்.

அதற்கு முன்பு தெலுங்கில் வந்துள்ள இந்த பாசக்கார படத்தில் நடித்து விட முடிவு செய்துள்ளாராம் மீரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil