»   »  'ஸ்டெடி' மீரா!!

'ஸ்டெடி' மீரா!!

Subscribe to Oneindia Tamil


வதந்திகள், சர்ச்சைகள், சச்சரவுகள் என ஒருபக்கம் அலைமோதிக் கொண்டிருந்தாலும் கூட, மீரா ஜாஸ்மினின் 'கேரியர் கிராப்' அதுபாட்டுக்கு 'ஸ்டெடி'யாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

Click here for more images

மீரா ஜாஸ்மின் நடிக்க வந்தது முதலே பல்வேறு வதந்திகளும் அவர் கூடவே அணி வகுக்க ஆரம்பித்தன. அவர் கூட காதல், இவருடன் காதல் என ஒரு பக்கம் காதல் செய்திகள், மறுபக்கம் குடும்பத்தாருடன் சர்ச்சை, நீண்ட காலமாக நட்போடு இருந்து வந்த இயக்குநர் லோகிததாஸுடன் பூசல் என புதுச் செய்தி, லேட்டஸ்டாக மாண்டலின் சீனிவாசனின் தம்பியுடன் ரகசியக் கல்யாணம் என வதந்தி.

இப்படி வதந்திகளும், சர்ச்சைகளும் சகட்டுமேனிக்கு அணிவகுத்தாலும் மீராவின் திரையுலக பயணம் தடையில்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது. அவர் தமிழில் படங்களைக் குறைத்து விட்டார் என்றாலும் கூட மலையாளத்தில் பிசியாகத்தான் இருக்கிறார்.

பிரபல இயக்குநர் சத்சயன் அந்திக்காடு இயக்கத்தில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மோகன்லால்தான் நாயகன். அந்திக்காடு இயக்கத்தில் மீரா நடிக்கும் 4வது படம் இது.

ஏற்கனவே அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், வினோதயாத்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்தப் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். அந்திக்காடு படத்திற்கு ராஜா இசையமைப்பது இது 5வது முறையாகும்.

Read more about: logidadas, meera jasmine, rumour

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil