»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணி ரத்னத்தின் அடுத்த படத்தில் மீரா ஜாஸ்மீன் நடிக்க உள்ளார்.

இரண்டு ஹீரோ சப்ஜெக்டான தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் மணி ரத்னம்.இரு ஹீரோக்களையும் புக் செய்துவிட்டார். ஸ்ரீகாந்த் மற்றும் தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமான நிதின்ஆகியோருக்கு அட்வான்சையும் கொடுத்துவிட்டார்.

இந் நிலையில் ஹீரோயின் சான்ஸ் மீரா ஜாஸ்மீனுக்கு அடிக்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கம் ஆசாமிகள். இதுகுறித்து மீராவுடன் மணிரத்னம் பேசிவிட்டதாகவும், உடனே மீரா தனது மலையாளத்து நண்பர் லோகிததாசுடன்பேசிவிட்டு வாய்ப்பை ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் தெரிகிறது.

மணி ரத்னத்துக்காக தனது சம்பளத்தைக் கூட குறைத்துக் கொள்ள மீரா முன் வந்துள்ளாராம். இளமை பொங்கும்,கம்ப்யூட்டர் என்ஜினியர்களின் காதல் கதையாம். விரைவில் சூட்டிங்கைத் தொடங்க உள்ளார் மணி.

இது ஷகீலா நியூஸ்..

மலையாளத்தில் சுத்தமாக வாய்ப்புகளை இழந்துவிட்டார் ஷகீலா. ஆனால், சனிக்கிழமை இரவுகளில் ஒருமலையாள டிவியில் இவரது படங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை வந்த ஷகீலா படங்கள்எல்லாவற்றையும் காட்டிவிட்டார்கள். இப்போது ரிபீல் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு டிவியில் ஷகீலாவுக்கு மவுசு நிரந்தரமாகியுள்ளது. இதனால் அந்த டிவிக்காகவே படம் எடுக்கமுடிவு செய்துள்ள சில தயாரிப்பாளர்கள் ஷகீலாவைத் தேடிப் போக ஆரம்பித்துள்ளனர்.

வரும் வாய்ப்புகளை அள்ளிப் போட்டு மீண்டும் பலான படங்களில் நடித்து வருகிறாராம் ஷகீலா. டிவிக்கு விற்றதுபோக சில பிரிண்டுகளை தமிழகம், ஆந்திரத்துக்கும் அனுப்பி காசு பார்க்க முடிவு செய்துள்ளனர்தயாரிப்பாளர்கள்.

அதே நேரத்தில் அன்புத் தொல்லை படத்தையடுத்து மேலும் சில தமிழ் வாய்ப்புகளும் ஷகீலாவுக்கு வரஆரம்பித்துள்ளன. எல்லாமே அப்படி இப்படி கேரக்டர்கள் தான், ஆனாலும் தட்டிக் கழிக்காமல் அட்வான்ஸைவாங்கிக் கொள்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil