»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கீதை படத்தை ஏன் தான் ஒத்துக் கொண்டோமோ என்று கடும் எரிச்சலில் இருக்கிறாராம் மீராஜாஸ்மின்.

விஜய்க்கு ஜோடி என்றவுடன் ஓகே. சொல்லி விட்ட மீராவுக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். கொஞ்சம்போல கவர்ச்சி காட்ட வேண்டும் என்று முதலில் கூறிய தயாரப்பாளர் பின்னர் ரீமாசென் ரேஞ்சுக்குகாட்டினால் நல்லாருக்குமே என்று வலியுறுத்த இறங்கி வந்தாராம் மீரா.

ஆனால், மும்தாஜ் ரேஞ்சுக்கு குட்டியூண்டு டிரஸ்களை கொடுத்து அணிந்து வரச் சொல்லவேகடுப்பாகிவிட்டாராம். அதை அணிய மீரா மறுக்க அவருக்கும் டைரக்டருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இடையில் தலையிட்ட விஜய், கவர்ச்சிக்கு தயாராக இருக்கும் இன்னொரு ஹீரோயினையும்போடுமாறு யோசனை சொல்ல இதையடுத்து தான் மும்பையில் இருந்து அமிஷா படேலைக்கூப்பிட்டு வந்தாராம் தயாரிப்பாளர்.

இதனால் ஒரு பககம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் இன்னொரு பிரச்சனை வந்துவிட்டதுமீராவுக்கு.

மீராவின் மீது கடுப்பில் உள்ள தயாரிப்பாளர் அவரது ரோலைக் குறைத்துவிட்டு கவர்ச்சி பார்டியானஅமிஷா பட்டேலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு உத்தரவு போட்டுவிட்டாராம்.

படத்தின் ஹீரோயின் மீராவா, அமீஷாவா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருவரது ரோல்களும்உல்டா செய்யப்பட்டுவிட்டனவாம்.

இதை விஜய்யிடம் போய் மீரா கண்கலங்கியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தான் இந்தப்படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மீன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil