»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அறிவுமணி என்ற படத்தின் ரிலீசுக்காக தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார் மீரா வாசுதேவன்.

மும்பையில் வளர்ந்த தமிழ்ப் பெண்ணான மீராவின் அகல விரிந்த கண்கள், அழுத்தம் திருத்தமானஉதடுகள், அசர வைக்கும் உடல்வாகு அவரை மாடலிங் பக்கம் தள்ளிவிட்டன. விளம்பரங்கள், டிவி தொடர்கள்என்று போய்க் கொண்டிருந்தவரை அவரை தமிழ் சினிமா இழுத்தது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தனது மகன் சரணை சினிமாவில் நிலை நிறுத்துவதற்காகத் தயாரித்தஉன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்தார் மீரா வாசுதேவன்

உன்னைச் சரணடைந்தேன் படத்தில் கண்ணியமாக நடித்து நல்ல பெயர் வாங்கினார். அதே நேரத்தில், கிளாமரானபோட்டோக்களை பத்திரிக்கைகளுக்கு அள்ளி வழங்கி, எதற்கும் தயார் என்பது போல் நெஞ்சை நிமிர்த்திவாய்ப்புகளுக்காகக் காத்திருந்தார்.

தமிழ் தெரியாத, செக்கச் செவலேன்றிருக்கும் மும்பை பெண்களைத் தேடி ஓடிய தமிழ் இயக்குனர்கள், தமிழரானமீரா வாசுதேவனைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தும் வாய்ப்புகள்இல்லாததால் மும்பைக்கு மீண்டும் போய்விட்டார்.

அங்கிருந்தபடியே சென்னையில் தனது சான்ஸ் தேடல்களை தொடர்ந்து கொண்டிருந்தார். முன்னணிநடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பாத்து அதற்காக முயன்று வந்தார். ஆனால் பின்னணிவரிசையில் கூட கடைசியில் இருக்கும் முரளியுடன் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் மீராவுக்கு வருத்தமே என்றாலும், முரளி படம் ஹிட்டாகி விட்டால் தன் மார்க்கெட் உயரும் என்றநப்பாசையில் ஓகே சொல்லிவிட்டார்.

ஆனால் விதி அவருக்கு எதிராக மிகப் பெரிய சதி செய்தது. அறிவுமணி என்று பெயரிட்டு கடந்த வருடம்தொடங்கப்பட்ட அந்தப் படம் இன்னும் முடியவில்லை. இது ஒரு லோ பட்ஜெட் காமெடிப் படம். குறுகிய காலத்தில்தயாரித்து ரிலீஸ் செய்து விடும் என்றுதான் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.

ஆனால் லோ பட்ஜெட்டுக்குக் கூட காசில்லாததால் படம் மிக மெதுவாக வருகிறது. வேறு படங்கள் எதுவும்இல்லாததால், இந்தப் படத்துக்காக இலவு காத்த கிளியாக காத்திருக்கிறார் மீரா வாசுதேவன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil