»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்யராஜுக்கு கண்ணுக்குத் தெரியாத இடத்தில் பெரிய சைசில் ஏதோ மச்சம் இருக்க வேண்டும்.

இவர் வயதையொத்த நடிகர்கள் வருடத்துக்கு ஒரு படம் கொடுத்து அதை ஓட்ட வைக்க தடுகிதித்தம்போட்டு வரும் நிலையில், சிலர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு டிவி சீரியலில் 5பெண்களுக்கு அப்பாவாக அழுது வடியும் கேரக்டர்கள் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தமனிதருக்கு கை நிறைய ஏகப்பட்ட படங்கள்.

அது மட்டுமல்ல விஜய், தனுஷ் ரேஞ்சுக்கு இவருக்கும் புதுசு புதுசாய் இளவட்ட ஹீரோயின்களைஇறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்.

பெரும்பாலான படங்களில் டபுள் ரோல் செய்து கொண்டிருக்கிறார். ஒரு ரோலுக்கு நமக்கு முகம்தெரிந்த சங்கவி, பிரேமா மாதிரி பழைய ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க, இன்னொரு ரோலுக்குவகை, வகையான இளவட்ட மும்மை அழகிகள்.

இந்த அழகிகளோடு துள்ளலாட்டம் போட்டு மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் அய்யர் ஐபிஎஸ் படத்தில் சத்யராஜுடன் ஜோடி சேருகிறார் மேகா. சத்யராஜுடன்நடிப்பதற்கு ஏற்ற நல்ல சைஸில் இருக்கிறார். நடிக்க எல்லாம் தெரியாது. ஆனால், அதே நேரத்தில்இயற்கை வளம் நிறைந்து காணப்படுகிறார். கவர்ச்சி விஷயத்தில் அச்சம், மடம், நாணம் எல்லாம்மடத்தனம் என்கிறார். இது போதாதா, தமிழில் ஒரு ரவுண்டு வர.

இந்தப் படத்தில் ஒரு சத்யராஜுக்கு அக்ரஹார ஐய்யர் வேடம். ஐபிஎஸ் படித்துவிட்டு குண்டர்களைஎல்லாம் நடுரோட்டில் டொபுக், டொபுக் என போட்டுத் தள்ளும் கேரக்டர்.

ஒரு சத்யராஜ் போலீஸ் என்றால், இன்னொரு சத்யராஜ் என்ன வேலை செய்வார் என்று உங்களுக்குத்தெரியாதா என்ன? அதே தான்..., பெரிய ரெளடி கேரக்டர்.

மங்கை டிவி சீரியல் புகழ் அரிராஜன் இயக்கும் இந்தப் படத்தில் ரெளடி சத்யராஜுக்கு ஜோடிசங்கவி. போலீஸ் அதிகாரி சத்யராஜுக்கு மேகா.

சென்னை, ஓகேனக்கல், பாண்டிச்சேரி என சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

இது தவிர சத்யராஜுன் படங்களின் விற்பனை விலையும் உயர ஆரம்பித்திருக்கிறது. அவர் நடிக்கும்மகா நடிகன் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம். என்.எஸ்.சி. என்ற சொல்லப்படும் வடஆற்காடு, சென்னை, தென் ஆற்காடு ஏரியாவில் இந்தப் படம் ரூ. 40 லட்சத்துக்குவிற்கப்பட்டுவிட்டது.

இதை அந்த வினியோகஸ்தரிடம் இருந்து இன்னொரு வினியோகஸ்தர் ரூ. 60 லட்சத்துக்கு கேட்டுக்கொண்டிருக்கிறாராம். எல்லாம் நேரம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil